ஆண்களுக்கு இலவச பேருந்து டிக்கெட் வழங்கி... மதுரையில் மாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள்
விஜய் திரையுலகில் 30 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கி விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாடி உள்ளனர்.
கோலிவுட்டில் அறிமுகம் ஈஸியாக கிடைத்தாலும், கடின உழைப்பால் முன்னேறி இன்று தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய். இவர் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆனதை நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுரையை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தில் அரசு பேருந்தில் பயணிக்கும் ஆண் பயணிகளுக்கும் இலவசமாக டிக்கெட் வழங்கி உள்ளனர். அரசுப் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அரசு அறிவித்துவிட்டதால், அதில் பயணிக்கும் ஆண்களுக்கு மட்டும் அவர் எங்கு செல்ல விரும்புகிறார்களோ அந்த இடத்துக்கான டிக்கெட்டை இலவசமாக வாங்கி கொடுத்துள்ளனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.
இதையும் படியுங்கள்... ஹரி வைரவன் கடைசியாக அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்... அவர் குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவித்த விஷ்ணு விஷால்
அதுமட்டுமின்றி விஜய் திரையுலகில் 30 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு இனிப்புகளையும் வழங்கி விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாடினர். அவர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... பிரம்மிப்பூட்டும் ஜெய்ப்பூர் அரண்மனையில்... பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஹன்சிகா திருமணம் - வைரலாகும் போட்டோஸ்