- Home
- Cinema
- சிம்புவின் பத்து தல படத்தில் இந்த நட்சத்திர ஜோடியும் நடிச்சிருக்காங்களா..! இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே
சிம்புவின் பத்து தல படத்தில் இந்த நட்சத்திர ஜோடியும் நடிச்சிருக்காங்களா..! இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் பிரபல நடிகர், நடிகை பத்து தல படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் பத்து தல. ஒபிலி என் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படம் கன்னடத்தில் ஷிவராஜ்குமார் நடிப்பில் வெளிவந்த மஃப்டி என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் தழுவலாக தயாராகி உள்ளது. மணல் மாஃபியாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற மார்ச் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
பத்து தல படத்தில் சிம்பு உடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம், கவுதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. ஏஜிஆர் என்கிற மாஸான கேங்ஸ்டராக நடித்துள்ள சிம்புவின் அதிரடி ஆக்ஷன் கலந்து வெளியிடப்பட்ட இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையும் படியுங்கள்... பயம் காட்டிய லியோவிற்கு பாடம் புகட்ட... உலக சுற்றுலாவை தள்ளிவைத்த அஜித்! ஏகே 62-வின் தரமான சம்பவம் லோடிங்
இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய இப்படத்தின் இயக்குனர் ஒபிலி என் கிருஷ்ணா, தமிழ்சினிமாவில் காதல் திருமணம் செய்துகொண்ட நட்சத்திர ஜோடிகளான ஆர்யாவும், சாயிஷாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் தகவலை வெளியிட்டார்.
இவ்ளோ நாள் சீக்ரெட்டாக வைத்திருந்த இந்த விஷயத்தை தற்போது இயக்குனர் வெளியிட்டதும் பலரும் ஷாக் ஆகினர். அவர்களுக்கு என்ன ரோல் என்பதை தெரிந்துகொள்ளவும் ஆர்வமாக உள்ளனர். ஆர்யாவும் சாயிஷாவும் இதற்கு முன் கஜினிகாந்த், டெடி போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்திருந்த நிலையில், தற்போது பத்து தல படத்துக்காக மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பத்து தல படம் பார்க்க... வீட்டை வித்தாவது தியேட்டருக்கு ஹெலிகாப்டர்ல வருவேன் - கூல் சுரேஷ் அலப்பறை