அதர்வா இல்லையாம்... வணங்கான் படத்தில் நடிக்க சூர்யா ரேஞ்சுக்கு தரமான நடிகரை தட்டித்தூக்கிய பாலா..!
வணங்கான் படத்தில் சூர்யா பாதியில் விலகிய நிலையில், அவருக்கு பதில் நடிக்க உள்ள நடிகர் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
நடிகர் விக்ரமுக்கு பெயர் வாங்கிக் கொடுத்த சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. இதையடுத்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அவன் இவன் என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்து வெற்றிகண்ட இயக்குனர் பாலாவுக்கு, கடைசியாக வெளிவந்த தாரை தப்பட்டை, நாச்சியார் மற்றும் வார்மா ஆகிய படங்கள் கைகொடுக்கவில்லை.
இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்த பாலா, கடந்த ஆண்டு இறுதியில் நடிகர் சூர்யாவுடன் கூட்டணி அமைத்தார். அப்படத்திற்கு வணங்கான் என பெயரிடப்பட்டு 2டி நிறுவனம், தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதம் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. ஒரு மாதம் கன்னியாகுமரியில் முதல்கட்ட ஷூட்டிங் நடத்தப்பட்டது.
அதன்பின் நிறுத்தப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இதனிடையே கடந்த சில வாரத்திற்கு முன் நடிகர் சூர்யா இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக இயக்குனர் பாலாவே அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சூர்யா விலகினாலும், வணங்கான் படம் கைவிடப்படவில்லை என்பதையும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படியுங்கள்... இயக்குனர் பாலாவை நம்பி... வணங்கான் படத்துக்காக இத்தனை கோடி செலவு செய்தாரா சூர்யா? - வெளியான ஷாக்கிங் தகவல்
இதையடுத்து சூர்யாவுக்கு பதில் அதர்வா நடிக்க உள்ளதாக பேச்சு அடிபட்டது. ஆனால் அது வெறும் வதந்தி என தெரியவந்தது. இந்நிலையில், தற்போது வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதில் நடிக்க உள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் அருண் விஜய்யை நடிக்க வைக்க இயக்குனர் பாலா முடிவு செய்துள்ளாராம்.
இதைப் பார்க்கும் போது சூர்யா ரேஞ்சுக்கு தரமான நடிகரை தான் பாலா தேர்வு செய்துள்ளார் என தோன்றுகிறது. இதன்மூலம் முதன்முறையாக பாலா இயக்கத்தில் நடிக்க உள்ளார் அருண் விஜய். இப்படத்தில் ஷூட்டிங்கை வருகிற பிப்ரவரி மாதம் மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளாராம் பாலா. இப்படத்தை இயக்குவதோடு மட்டுமின்றி தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் உள்ளாராம் பாலா. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... அப்போ வர்மா, இப்போ வணங்கான்! பாலாவை பாதியில் கழட்டிவிட்ட ‘பிதாமகன்’கள்..!