- Home
- Cinema
- Arun Vijay: படப்பிடிப்பில் நடந்த விபரீதம்.! உடல் கன்னிப்போய் ரத்த கட்டுடன் புகைப்படம் வெளியிட்ட அருண் விஜய்!
Arun Vijay: படப்பிடிப்பில் நடந்த விபரீதம்.! உடல் கன்னிப்போய் ரத்த கட்டுடன் புகைப்படம் வெளியிட்ட அருண் விஜய்!
நடிகர் அருண் விஜய் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தின் போது, ஏற்பட்ட ரத்தக்கட்டு காயத்துடன் வெளியிட்டுள்ள புகைப்படம், தற்போது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் பல்வேறு சவால்களை கடந்து இன்று முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர் அருண் விஜய். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'யானை', 'சினம்' போன்ற படங்கள் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது அருண் விஜய் இயக்குனர் ஏ.எல்.விஜய் தலைவி படத்தை தொடர்ந்து இயக்கி வரும், 'அச்சம் என்பது இல்லையே' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், நீண்ட இடைவெளிக்கு பின்னர், அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை எமி ஜாக்சன் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் துவங்கியபோது, இதுகுறித்த புரோமோ ஒன்றை வெளியிட்டு இந்த படம் குறித்து அறிவித்திருந்தது படக்குழு. மேலும் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த பின்னர், சண்டை பயிற்சியில் ஈடுபட்ட போது அவருக்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டு, கட்டுடன் உடல் பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டார்.
இதை தொடர்ந்து, டூப் போடாமல் ஸ்டண்ட் காட்சியில் ஈடுபட்ட போது... கையில் பலமாக ஆடிப்பட்டதில் அவருக்கு ரத்த கட்டு காயம் ஏற்பட்டு... சிவந்து கன்னிப்போய் உள்ளது. இந்த புகைப்படத்தை அவரே வெளியிட்டு, ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.