'தளபதி 67' பிரபல ஹாலிவுட் படத்தின் மறு உருவாக்கமா? LCU படம் என்பதை உறுதி செய்யும் விதமாக கசிந்த தகவல்!
'தளபதி 67' திரைப்படம் ஹாலிவுட் திரைப்படத்தின், மறு உருவாக்கமாக எடுக்கப்பட உள்ளதாக ஒரு தகவல் தற்போது சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது.
நடிகர் விஜய் 'வாரிசு' படத்தில் படபிடிப்பை முடித்த கையோடு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக தன்னுடைய 67 வது படத்தை நடிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாத இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கான பணிகளிலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதீத கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் இயக்கத்தில் வெளியான, அனைத்து படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், தளபதி 67 படத்திலும் ஏதேனும் வித்தியாசத்தை புகுத்தி ரசிகர்களை கவர வேண்டும் என படத்தின் கதையை மெருகேற்றி வருவதாக கூறப்படுகிறது.
'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' வடிவேலு பாடியுள்ள பணக்காரன் செகண்ட் சிங்கிள் பாடல் வெளியானது!
மேலும் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகர் விஷால், கௌதம் மேனன், ஆகியோர் நடிக்க உள்ளதாகவும்... இன்னும் சில வில்லன் நடிகர்கள் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல் நடிகர் கமல் ஹாசனும், கெஸ்ட் ரோலில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும், திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகின.
ஆனால் தற்போது வரை இந்த படத்தில், நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அவ்வப்போது தளபதி 67 படம் குறித்து, சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் எனப்படும் எல்.சி.யு வில் இடம்பெறும் என கூறப்பட்டு வந்த நிலையில் அந்த தகவலை உறுதி செய்யும் விதமாக தற்போது மற்றொரு சூப்பர் தகவலும் வெளியாகி உள்ளது.
அதாவது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் படமான 'ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ்' படத்தின் உரிமையை அதிகாரபூர்வமாக வாங்கி உள்ளதாகவும், தளபதி 67 படத்தின் கதைக்காக இந்த படத்தை மறு உருவாக்கம் செய்வது போல் அவர் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் எல் சி யூவிலும் இடம்பெற உள்ளதாக... சில நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.