MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அருண் விஜய் மகளா இது? ஹீரோயின் போல் இருக்காங்களே.. அத்தை அனிதாவோடு ஓணம் கொண்டாடிய போட்டோஸ்!

அருண் விஜய் மகளா இது? ஹீரோயின் போல் இருக்காங்களே.. அத்தை அனிதாவோடு ஓணம் கொண்டாடிய போட்டோஸ்!

நடிகர் அருண் விஜய்யின் ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்று கூடி ஓணம் பண்டிகையை கொண்டாடிய அழகிய தருணங்களின் புகைப்படத்தை அனிதா விஜயகுமார் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட, ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்துவருகிறது . 

4 Min read
manimegalai a
Published : Sep 16 2024, 11:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Vijaykumar Family Celebration

Vijaykumar Family Celebration

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் ஒட்டு மொத்த குடும்பமும், ஒன்றிணைந்து இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை கொண்டாடி சிறப்பித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் சிலவற்றை அவருடைய மகள் அனிதா விஜயகுமார் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், வைரலாக பார்க்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

28
Vijayakumar Movies

Vijayakumar Movies

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் ஹீரோவாக மாறிய நடிகர்களில் ஒருவர் தான் விஜயகுமார். 60-களில்  ஸ்ரீவள்ளி, மகாவீர பீமன், தாயே உனக்காக, ஆகிய படங்களில் சைல்டு ஆர்ட்டிஸ்ட்டாக நடித்த விஜயகுமார், இதை தொடர்ந்து பொண்ணுக்கு தங்க மனசு, என்கிற திரைப்படத்தின் மூலம் 70களில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து மாணிக்கத் தொட்டில், அவள் ஒரு தொடர்கதை, தேவி ஸ்ரீ கருமாரி அம்மன், மயங்குகிறாள் ஒரு மாது, ஆண் பிள்ளை, பயணம், மேயர் மீனாட்சி, துணிவே துணை, வரப்பிரசாதம், என அடுத்தடுத்து பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க துவங்கியது... இவரின் ஹீரோ கனவை பாதித்தது.

முன்னாள் காதலிக்கு பாட்டு எழுதி இசையமைத்த இளையராஜா! என்னமா ஃபீல் பண்ணி எழுதிருக்காரு பாருங்க!!

38
Talented Actor Vijayakumar:

Talented Actor Vijayakumar:

ஹீரோவாக நடிக்கும் போதே சப்போர்டிங் ரோல்களில் விஜயகுமார் நடிக்க ஆரம்பித்ததால் அடுத்தடுத்து இதே போன்ற கதாபாத்திரமே இவருக்கு கிடைத்தது. எனவே அழகும், திறமையும் இருந்தும் கூட இவரால் முன்னணி கதாநாயகனாக திரையுலகில் ஜொலிக்க முடியாமல் போனது. இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகுமார், ஜெமினி கணேசன், சிவாஜி, ஜெய்சங்கர், போன்ற மூத்த முன்னணி நடிகர்களுடனும்... கமல் ரஜினிகாந்த, விஜயகாந்த், சத்யராஜ், விஜய் அஜித், போன்ற அணைத்து நடிகர்களுடனும் நடித்த பெருமைக்கு உரியவர். 

48
Vijayakumar family Onam Celebration:

Vijayakumar family Onam Celebration:

ஏராளமான இளம் நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ள விஜயகுமார், கடைசியாக தமிழில் தன்னுடைய மருமகன் ஹரி இயக்கத்தில், இந்த ஆண்டு வெளியான ரத்னம் திரைப்படத்தில் நடித்திருந்தார். தன்னுடைய 81 வயதிலும் நல்ல ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வரும் விஜயகுமார், தன்னுடைய மகன் முன்னணி கதாநாயகனாக இருப்பதாலும், அணைத்து மகள்களையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து... அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதால்... பல ஆண்டுகள் நடித்தது போதும் என சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு, வீட்டை மகன், மருமகள், பேரன், பேத்தி, மனைவி ஆகியோருடன்...  நேரம் செலவழித்து வருகிறார்.

"வித்அவுட் மேக்அப்.. Rugged லுக்கில் மிரட்டப்போறேன்" அடுத்த படம் பற்றி பேசிய "லெஜெண்ட்"!

58
Vijaykumar big Family

Vijaykumar big Family

5 மகள், 1 மகன், 15க்கும் மேற்பட்ட பேரன் பேத்திகள், மற்றும் அவர்களின் பிள்ளைகள் என இவருடைய குடும்பம் ஒன்று சேர்ந்தாலே அந்த இளம் கொண்டாட்டங்களால் கலை கட்ட துவங்கிவிடும். அதே போல், எந்த ஒரு கொண்டாட்டம் என்றாலும் அதனை தனித்துவமாக கொண்டாடி வருவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக திருமணமாகி வெளிநாட்டில் செட்டில் ஆன... விஜயகுமார் - முத்து கன்னுவின் இரண்டாவது மகளான அனிதா விஜயகுமார், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் வந்து செட்டில் ஆனார். இந்தியா வந்த கையோடு புதிய வீடு ஒன்றை வாங்கி அதற்கு கிரகப்பிரவேசம் செய்வதோடு தன்னுடைய மகளின் திருமண நிச்சயதார்தத்தையும், அன்றைய தினமே செய்து முடித்தார். பின்னர் சுமார் ஆறு மாதங்கள் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்த அனிதா விஜயகுமார், இந்தாண்டு பிப்ரவரி மாதம் தன்னுடைய மகளின் திருமணத்தை சிறப்பாக செய்து முடித்தார்.

68
Vanitha vijayakumar

Vanitha vijayakumar

வனிதா விஜயகுமரிடம் மட்டும் இவர் குடும்ப பிரச்சனை காரணமாக பேசாத நிலையில், 4 மகள், 1 மகன், 15க்கும் மேற்பட்ட பேரன் பேத்திகள், மற்றும் அவர்களின் பிள்ளைகள் என இவருடைய குடும்பம் ஒன்று சேர்ந்தாலே அந்த இளம் கொண்டாட்டங்களால் கலை கட்ட துவங்கிவிடும். அதே போல், எந்த ஒரு விசேஷம் என்றாலும் அதனை தனித்துவமாக கொண்டாடி வருவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக திருமணமாகி வெளிநாட்டில் செட்டில் ஆன... விஜயகுமார் - முத்து கன்னுவின் இரண்டாவது மகளான அனிதா விஜயகுமார், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் வந்து செட்டில் ஆனார். இந்தியா வந்த கையோடு புதிய வீடு ஒன்றை வாங்கி அதற்கு கிரகப்பிரவேசம் செய்வதோடு தன்னுடைய மகளின் திருமண நிச்சயதார்தத்தையும், அன்றைய தினமே செய்து முடித்தார். பின்னர் சுமார் ஆறு மாதங்கள் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்த அனிதா விஜயகுமார், இந்தாண்டு பிப்ரவரி மாதம் தன்னுடைய மகளின் திருமணத்தை சிறப்பாக செய்து முடித்தார்.

சிரஞ்சீவி வாழ்க்கையையே திருப்பி போட இருந்த சம்பவம்! மெகா ஸ்டார் திருமண விஷயத்தில் கடைசியில் நடந்த ட்விஸ்ட்?

78
Anitha vijayakumar Onam Celebration:

Anitha vijayakumar Onam Celebration:

இதைத் தொடர்ந்து தன்னுடைய மகளுக்கு சுமார் நான்கு முறை திருமண ரிசப்ஷன் செய்து அழகு பார்த்த அனிதா விஜயகுமார், தன்னுடைய குடும்பத்தில் நடக்கும் விசேஷங்கள் மற்றும் எங்கு வெளியில் சென்றாலும் அது குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதால், இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான ஃபாலோவர்ஸ் உள்ளனர். அந்த வகையில் தற்போது, தன்னுடைய அம்மா முத்து கன்னு, தங்கை ப்ரீத்தா, அருண் விஜயின் மனைவி ஆர்த்தி, அருண் விஜய் மகள், மகன், அக்கா கவிதாவின் மகள், உள்ளிட்ட அனைவருடனும் அனிதா விஜயகுமார் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை அனிதா தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

88
Anitha Vijayakumar With Mother:ஓணம் கொண்டாட்டம்; கேரளா ஸ்டைலில் ஓணம் பண்டிகை கொண்டாடிய அனிதா விஜயகுமார் போட்டோஸ்!

Anitha Vijayakumar With Mother:ஓணம் கொண்டாட்டம்; கேரளா ஸ்டைலில் ஓணம் பண்டிகை கொண்டாடிய அனிதா விஜயகுமார் போட்டோஸ்!

மேலும் இந்த புகைப்படங்களை வெளியிட்டு கடந்த 20 ஆண்டுகளாக கத்தாரில் வாழ்ந்தபோது,  எனது தோகா குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி இருந்தேன். நான் இந்தியாவில் இருந்து சென்றதால், என்னால் பழக்க வழங்கங்களை மாற்றிக்கொள்ள முடியவில்லை. இந்த வருடம் சென்னையில் என்னுடைய அழகான குடும்பத்துடன் ஓணம் கொண்டாடி மகிழ்ந்துள்ளேன் என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருவது ஒருபுறம் இருந்தாலும், அருண் விஜயின் மகள் பூர்வியின் லேட்டஸ்ட் லுக் அனைவரையும் கவர்ந்துள்ளது. எளிமையான சுடிதாரில், ஃப்ரீ ஹேர் ஸ்டைலில்... ஹீரோயின் போல் இருப்பதாக தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

இரவு பார்ட்டியால் கிடைத்த பட வாய்ப்பு; திருமணமான நடிகரின் தொடர்பால் கேரியரை இழந்து காணாமல் போன தமிழ் நடிகை!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved