MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சிரஞ்சீவி வாழ்க்கையையே திருப்பி போட இருந்த சம்பவம்! மெகா ஸ்டார் திருமண விஷயத்தில் கடைசியில் நடந்த ட்விஸ்ட்?

சிரஞ்சீவி வாழ்க்கையையே திருப்பி போட இருந்த சம்பவம்! மெகா ஸ்டார் திருமண விஷயத்தில் கடைசியில் நடந்த ட்விஸ்ட்?

சிரஞ்சீவிக்கு,  சுரேகாவை திருமணம் செய்து கொடுக்க... சுரேகாவின் தந்தை சம்மதம் கூறிய பின்னர், மனக்குழப்பத்தில் தவித்த நேரத்தில்.. சுரேகாவின் வார்த்தை தான் இந்த திருமணம் நடைபெற காரணமாக அமைந்ததாம்.  

2 Min read
Author : manimegalai a
Published : Sep 14 2024, 06:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Chiranjeevi

Chiranjeevi

சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்காத போதே, அல்லு ராமலிங்கையா சிரஞ்சீவியை தனது மருமகனாக ஏற்றுக்கொண்டார். அதாவது சிரஞ்சீவி அவரின் மனைவி சுரேகாவை திருமணம் செய்து கொள்ளும் போது, சிரஞ்சீவிக்கு பெரிய புகழ் எல்லாம் இல்லை. 1980-ல் தன்னுடைய மனைவியை கரம்பிடித்த போது நேரத்தில்... இவர் நடிப்பில், 1978 ஆம் ஆண்டு வெளியான பிராணம் கரீது மற்றும் புனாதிரல்லு போன்ற சில படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகி இருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Chiranjeevi Marriage

Chiranjeevi Marriage

ஒரு சில படங்களிலேயே சிரஞ்சீவி திறமையான நடிகர் என்பதை புரிந்து கொண்ட, மூத்த நடிகர் அல்லு ரமலிங்கையா, அவரை தனது மருமகனாக ஆக்கிக்கொள்ள விரும்பினார். எப்படியும் ஒரு நாள் சிரஞ்சீவி பெரிய நடிகராக வருவார் என்ற நம்பிக்கை அல்லு ரமலிங்கையாவுக்கு ஆணித்தனமாக இருந்ததால், சிரஞ்சீவியை அழைத்து சுரேகாவை மணக்க சம்மதமா என்று கேட்டுள்ளார்.

ஹைக்கூ கவிதை வரிகளால்... வித்யாசாகர் இசையில் உருவான முதல் சூப்பர் ஹிட் பாடல்! எது தெரியுமா?

36
Chiranjeevi And Surekha Marriage

Chiranjeevi And Surekha Marriage

அப்போதே அல்லு ராமலிங்கையா ஒரு முன்னணி நகைச்சுவை நடிகர், மற்றும் குணச்சித்திர நடிகர். பணம், பதவி, அந்தஸ்து என அல்லு ராமலிங்கையா உயர்ந்த இடத்தில் இருந்தார். ஆனால் ஒரு சாதாரண, வளர்ந்து வரும் ஹீரோவுக்கு தனது மகளை கொடுக்க நினைப்பது, சிரஞ்சீவிக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்திய போதிலும், சுரேகாவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கூறினார்.

46
Allu Ramalingaiah Daughter Surekha

Allu Ramalingaiah Daughter Surekha

அதே நேரம் அல்லு ராமலிங்கையாவுக்கு ஒரு சந்தேகம். நான் செய்வது சரியா? என்பதில். மறுபுறம் சுரேகாவுக்கு பெரிய பெரிய இடங்களில் இருந்து அவரை பெண் கேட்டு திருமண அழைப்புகள் வந்துகொண்டிருந்தன. குறிப்பாக சுரேகாவை திருமணம் செய்து கொள்ள கலெக்டர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்ததாம். எனவே நடிகர் சிரஞ்சீவிக்கு கொடுக்கலாமா...  நிலையான மற்றும் உயர் பதவியில் இருக்கும் கலெக்டருக்கு கொடுக்கலாமா? என்ற மன குழப்பத்துக்கு ஆளானார் அல்லு ராமலிங்கையா.

அப்போது அல்லு ராமலிங்கையா, தனது நெருங்கிய நண்பரும், நல்ல ஆலோசகருமான நடிகர் பிரபாக்கர் ரெட்டியை சந்தித்தாராம். சுரேகாவின் திருமணம் குறித்து அவரது ஆலோசனையை கேட்டாராம். "ரெட்டி சார்... சுரேகாவுக்கு இரண்டு இடங்களில் இருந்து திருமண அழைப்புகள் வந்திருக்கு. சிரஞ்சீவி.. சுரேகாவை மணக்க சம்மதம் தெரிவித்துள்ளார். மறுபுறம் கலெக்டர் ஒருத்தரிடமிருந்தும் திருமண அழைப்பு வந்திருக்கு. இதில் யாருக்கு சுரேகாவை திருமணம் செய்து கொடுத்தால் நல்லது, என்று கேட்டாராம். 

8 நாளில் 'ஜெயிலரை' அலறவிட்ட... தளபதின் 'கோட்' பட வசூல்! எத்தனை கோடி தெரியுமா?

56
Prabhakar Reddy Advice

Prabhakar Reddy Advice

அல்லு ராமலிங்கையாவின் கேள்விக்கு பிரபாக்கர் ரெட்டி நேரடியாக பதில் அளித்தாராம். திருமண விஷயத்தில் பெண்ணின் விருப்பம் என்பது மிகவும் முக்கியம். பெண்ணுக்கு விருப்பமில்லாமல் எவ்வளவு பெரிய இடத்தில் திருமணம் செய்து கொடுத்தாலும் அவள் சந்தோஷமாக இருக்க மாட்டாள். அதனால் சுரேகாவையே கேளுங்க,  பெண்ணின் விருப்பப்படி திருமணம் செய்யுங்கன்னு சொன்னாராம். 

பிரபாக்கர் ரெட்டி கூறியது போலவே தனது சுரேகாவின் விருப்பத்தை கேட்டுள்ளார் அல்லு ராமலிங்கையா... அவர் சிரஞ்சீவியை திருமணம் செய்துகொள்ள சம்மதித்தாராம். மகள் சம்மதித்தவுடன் அல்லு ரமலிங்கையா சிரஞ்சீவியுடனான திருமணத்தை உறுதி செய்தார். அதன் படை சிரஞ்சீவி - சுரேகா திருமணம் 1980 பிப்ரவரி 20 ஆம் தேதி திரைப்பட பிரபலங்கள் முன்னிலையில் விமர்சியாக நடந்தது.

66
Chiranjeevi Success:

Chiranjeevi Success:

ஒருவேளை சுரேகா கலெக்டரை திருமணம் செய்திருந்தால் அது சிரஞ்சீவியின் வாழ்க்கையையே மாற்றி போட்டிருக்க கூடும். சிரஞ்சீவி ஒரு பெரிய நட்சத்திரமாக உயர்ந்த பிறகு கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் வேறு ஒரு நிலைக்கு சென்றது. மாமனாருக்காக அந்த நிறுவனத்தில் சிரஞ்சீவி பல படங்களில் நடித்தார். சிரஞ்சீவி-கீதா ஆர்ட்ஸ் கூட்டணியில் வெளியான பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றன. 

அதேபோல் அல்லு ராமலிங்கையாவின் மருமகனான பிறகு சிரஞ்சீவிக்கு திரைத்துறையில் உயர்வதற்கு வழி எளிதானது. அல்லு ராமலிங்கையா காரணமாக சிரஞ்சீவிக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. அந்த வாய்ப்புகளை தனது திறமையால் வெற்றிகளாக மாற்றி சிரஞ்சீவி மெகா ஸ்டாராக உயர்ந்தார். சிரஞ்சீவி-சுரேகா திருமணத்திற்கு முன் நடந்த இந்த சம்பவம் குறித்து, நடிகர் பிரபாக்கர் ரெட்டியின் மனைவி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

இரவு பார்ட்டியால் கிடைத்த பட வாய்ப்பு; திருமணமான நடிகரின் தொடர்பால் கேரியரை இழந்து காணாமல் போன தமிழ் நடிகை!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved