- Home
- Cinema
- 3 மாத கருவை கலைக்க பொய் புகார்! இதுவே சாட்சி... திவ்யா மீது கணவர் அர்ணவ் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!
3 மாத கருவை கலைக்க பொய் புகார்! இதுவே சாட்சி... திவ்யா மீது கணவர் அர்ணவ் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!
'கேளடி கண்மணி' சீரியல் மூலம் மிகவும் பிரபலமான அர்ணவ், தன்னுடைய மனைவி திவ்யா ஸ்ரீதர், கருவை கலைப்பதற்காக பொய் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது , சீரியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளித்திரை நடிகர் - நடிகைகளுக்கு கிடைப்பது போன்றே வரவேற்பு, சின்னத்திரை பிரபலங்களுக்கும் தொடர்ந்து கிடைத்து வருகிறது. மேலும், ஒரே சீரியலில் இணைந்து நடிக்கும் போது... அந்த சீரியலில் நடிக்கும் நாயகன், நாயகி காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பழமும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான 'கேளடி கண்மணி' சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள் தான் கர்நாடகாவை சேர்ந்த திவ்யா ஸ்ரீதர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த சீரியல் நடிகர் அர்ணவ்.
மேலும் செய்திகள்: 40 வயதிலும் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டி போடும் ஸ்ரேயா... உள்ளாடை தெரிய ஓவர் கிளாமர் உடையில் ஹாட் போட்டோ ஷூட்!
இந்த சீரியலில் நடித்த போது ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது. எனவே... சுமார் 5 வருடம் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்த இவர்கள், திவ்யா கர்ப்பமான பின்னர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் கூட தங்களின் திருமண புகைபடங்களை திவ்யா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டிருந்தார். மேலும் திவ்யா, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி என்கிற தொடரிலும், அர்ணவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'செல்லம்மா' என்கிற சீரியலிலும் நடித்து வருகிறார்.
மேலும் செய்திகள்: ஆஸ்கர் ரேஸில் அதிரடியாக நுழையும் 'ஆர் ஆர் ஆர்' ! விருதை வாங்கியே தீரணும்... படக்குழு போட்ட பக்கா பிளானை பாருங்
மிகவும் சந்தோஷமாக தங்களுடைய திருமண வாழ்க்கையை துவங்கிய திவ்யா திடீர் என, தன்னை கணவர் அர்ணவ் அடித்து துன்புறுத்தியதில், வயிற்றில் அடிபட்டு குழந்தை எந்நேரமும் கலையலாம் என மருத்துவர்கள் கூறியதாக, மருத்துவமனையில் இருந்தபடியே வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.
அர்ணவ் அடித்ததில் மயங்கி விட்டதாகவும், மயக்கம் தெளிந்தவுடன் கண்விழித்து பார்த்தபோது தனது கணவர் அங்கே இல்லை என்றும் பின்னர் வயிறு வலி ஏற்பட்டு பிளீடிங் ஆக ஆரம்பித்ததும் மருத்துவமனைக்கு வந்ததாக அந்த வீடியோவில் கண்ணீர் மல்க பேசி உள்ளார். மேலும் இருவருக்கும் இடையே நடந்த பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும் செய்திகள்: 'இந்தியன் 2' படத்தில் நடிக்க சத்யராஜ் கேட்ட சம்பளம் இவ்வளவா..? ஷாக்கான ஷங்கர்..! தீயாய் பரவும் தகவல்..!
Divya Shridhar love jihad
இந்த நிலையில் தான் தற்போது திவ்யாவின் கணவர் அர்ணவ் , இந்த புகாரை மறுத்துள்ளளோடு , 3 மாத கர்ப்பத்தை கலைப்பதற்காகவே திவ்யா பொய் புகார் அளித்துள்ளதாக கூறி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். நான் வீட்டில் இல்லை என்பதற்கு சிசிடிவி காட்சியே ஆதாரம் என தெரிவித்துள்ளார்.திவ்யாவின் புகாரை தொடர்ந்து, அர்ணவ்வும் புகார் அளித்துள்ள சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.