Asianet News TamilAsianet News Tamil

ஆஸ்கர் ரேஸில் அதிரடியாக நுழையும் 'ஆர் ஆர் ஆர்' ! விருதை வாங்கியே தீரணும்... படக்குழு போட்ட பக்கா பிளானை பாருங்

ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெற உள்ளதாக வெளியாகி உள்ள அதிகார பூர்வ தகவல் ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சிகள் ஆழ்த்தியுள்ளது.
 

Ramcharan and jr ntr starring RRR movie enter in Oscar award list
Author
First Published Oct 6, 2022, 4:40 PM IST

95 ஆவது ஆஸ்கர் விருதுக்காக, வெளிநாட்டு படங்கள்  சார்பில்...  இந்தியாவில் இருந்து அனுப்பப்பட உள்ள திரைப்படங்களை தேர்வு செய்யும் நிகழ்வு சமீபத்தில் நடந்த  நிலையில், இதில் மொத்தம் 19 பேர் கலந்து கொண்டு ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும் திரைப்படத்தை தேர்வு செய்தனர்.

இதில் இந்தி திரைப்படங்கள் ஆறு, அசாம் திரைப்படம் ஒன்று, தமிழில் ஒன்று, குஜராத்தி மொழியில் ஒன்று, தெலுங்கில் இரண்டு, மலையாளத்தில் ஒன்று, பெங்காளியில் ஒன்று, என மொத்தம் 13 திரைப்படங்கள் ஆஸ்கர் நுழைவுக்கு பரிசீலிக்கப்பட்டு. இதில் இறுதியாக குஜராத்தி மொழியில் வெளியான 'செலோ ஷோ' என்ற திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப தேர்வு செய்யப்பட்டது.

Ramcharan and jr ntr starring RRR movie enter in Oscar award list

எனினும் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண் - ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி, 1000 கோடி வசூல் செய்த, ஆர் ஆர்ஆர்  திரைப்படம் இந்த பட்டியலில் இடம்பெறாதது தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது இந்த படம் ஆஸ்கர் விருது பட்டியலில் 'ஜெனரல்' கேட்டகிரியில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எப்படியும் ஆஸ்கர் விருதை வாங்கியே தீர வேண்டும் என்கிற முனைப்புடன் மொத்தம் 14 பிரிவுகளில் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' படத்தில் நான் நடிக்க ஆசைப்பட்ட கதாபாத்திரம் இது! படம் பார்த்த பின் பூரிப்புடன் பேசிய கமல்
 

Ramcharan and jr ntr starring RRR movie enter in Oscar award list

மேலும் செய்திகள்: 'இந்தியன் 2' படத்தில் நடிக்க சத்யராஜ் கேட்ட சம்பளம் இவ்வளவா..? ஷாக்கான ஷங்கர்..! தீயாய் பரவும் தகவல்..!
 

சிறந்த இயக்குநர் (ராஜமெளலி), சிறந்த நடிகர் (ஜூனியர் என்.டிஆர், ராம் சரண்), சிறந்த துணை நடிகர்(அஜய் தேவ்கன்), சிறந்த பாடல் ( நாட்டு நாட்டு), சிறந்த பின்னணி இசை (கீரவாணி), சிறந்த பட தொப்பாளர் (ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒலி அமைப்பு (ரகுநாத் கெமிசெட்டி, போலோ குமார் டோலாய், ராகுல் கர்பே), சிறந்த திரைக்கதை ( விஜயேந்திர பிரசாத், ராஜமெளலி, சாய் மாதவ்), சிறந்த துணை நடிகை ( ஆலியா பட்), சிறந்த ஒளிப்பதிவு ( செந்தில் குமார்), சிறந்த தயாரிப்பு (சபு சிரில்), சிறந்த ஆடை அமைப்பாளர் ( ராம ராஜமெளலி), சிறந்த  சிகை அலங்காரம் மற்றும் ஒப்பணையாளர் (நல்ல ஸ்ரீனு, சேனாபதி ), சிறந்த காட்சி அமைப்பு (ஸ்ரீனிவாஸ் மோகன்)  ஆகிய பிரிவுகளின் கீழ் பக்கா பிளான் போட்டு மீண்டும் ஆஸ்கர் ரேஸில் இறங்கியுள்ளது 'ஆர் ஆர் ஆர்'. மேலும் ரசிகர்களும் விருதுகளை குவிக்க வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios