MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பட்ஜெட் 45 கோடி; வசூல் 60 ஆயிரம்! இந்தியாவின் மிகப்பெரிய பிளாப் படம் எது தெரியுமா?

பட்ஜெட் 45 கோடி; வசூல் 60 ஆயிரம்! இந்தியாவின் மிகப்பெரிய பிளாப் படம் எது தெரியுமா?

45 கோடி ரூபாய்க்கு மேல் பட்ஜெட்டில் தயாரான இந்த திரைப்படம் 60 ஆயிரம் மட்டுமே வசூலித்துள்ளது. அந்த திரைப்படம் எது? இது உலகின் மோசமான சாதனை படைத்த இந்திய திரைப்படம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 31 2025, 09:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Biggest Disaster Movie in India : பான் இந்தியா படங்களின் டிரெண்ட் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. சின்ன ஹீரோக்களாக இருந்தாலும் கொஞ்சம் பட்ஜெட் அதிகமாகவே போட்டு, நான்கு ஐந்து மொழிகளில் திரைப்படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். ஆனால் ரிலீஸ் ஆன திரைப்படங்கள் எல்லாம் ஒரே ரிசல்ட் கொடுப்பதில்லை. பட்ஜெட் குறைவாக போட்ட சில திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன சம்பவங்களும் நிறைய உள்ளன. அதேவேளையில் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மொக்கை வாங்கிய படங்களும் உள்ளன. அப்படி ஒரு திரைப்படத்தை பற்றிதான் பார்க்க உள்ளோம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

ஸ்டார் ஹீரோ நடித்தும் பிளாப் ஆனது

இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுடன் ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் படுதோல்வி அடைந்தது. போட்ட முதலீடு கூட திரும்ப வரவில்லை, அது மட்டுமின்றி. பட்ஜெட்டுக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத வசூலை பெற்றிருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத மாதிரி தயாரிப்பாளர்களுக்கும் இப்படம் மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்தது. அது சிறிய ஹீரோ படம் அல்ல. பெரிய புரொடியூசர் மகன், ஸ்டார் ஹீரோநடித்தும் அந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு டிசாஸ்டர் படமாக மாறியது. 

இதையும் படியுங்கள்... வாய்ப்பில்ல ராஜா! 50 வயது நடிகையோடு டேட்டிங் சென்று பிரேக்-அப் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூர் மகன்

35

லேடி கில்லர் படுதோல்வி

அந்த திரைப்படம் வேறு எதுவும் இல்லை லேடி கில்லர். அதில் ஹீரோவாக நடித்தது வேறு யாரும் இல்லை அர்ஜுன் கபூர். லேடி கில்லர் திரைப்படத்திற்கு புரொடியூசர்ஸ் போட்ட முதலீட்டில் வெறும் 0.0001 சதவீதம் மட்டுமே வசூல் கிடைத்தது. இதன்மூலம் இந்தியாவிலேயே மிகவும் மோசமான திரைப்படம் என்று சாதனையை இப்படம் படைத்துள்ளது. சுமார் 45 கோடி ரூபாயில் திரைக்கு வந்த இந்த திரைப்படம், வெறும் 60 ஆயிரம் வசூல் செய்தது. இதுவரை பான் இந்தியா வரலாற்றிலேயே பெரிய பிளாப் படம் என்றால் அது லேடி கில்லர் திரைப்படம் தான்.

45

அர்ஜுன் கபூருக்கு செம அடி

2023ம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி ரிலீஸ் ஆன லேடி கில்லர் திரைப்படத்தில் பாலிவுட் ஸ்டார் ஹீரோ அர்ஜுன் கபூர் நடித்துள்ளார். ரொம்ப நாட்களாக ஒரு சரியான ஹிட்-க்காக காத்துக் கொண்டிருந்த அர்ஜுன் கபூருக்கு இந்த திரைப்படம் ஒரு ஆறுதல் கொடுக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் இந்த திரைப்படத்திலிருந்து பெரிய அடி விழுந்தது. அப்போதே மலாய்கா அரோராவுடன் டேட்டிங்கில் இருந்தார் அர்ஜுன் கபூர். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நியூஸில் இருந்த அர்ஜுன் கபூர், ஒரு நல்ல பிரேக்கிற்காக காத்துக் கொண்டிருந்த நேரத்தில் கெரியரில் மிகப்பெரிய டிசாஸ்டர் ஆக இந்த படம் அமைந்தது.

55

நெட்பிளிக்ஸே தூக்கி எறிந்த படம்

பூமி பட்னேகர் ஹீரோயினாக நடித்த இந்த திரைப்படத்தை அஜய் பால் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் தற்போது யூடியூபில் காணா கிடைக்கிறது. இந்த திரைப்படம் மொத்தம் 12 ஷோ தான் போடப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர்கள் ஓடிடி ரிலீஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால், படத்திற்கு இந்த ரிசல்ட் கிடைத்ததாம். முதல் நாள் இப்படம் 38 ஆயிரம் வசூல் செய்தது. இந்தப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியுடன் டீல் பேசி இருந்தார்கள். ஆனால் திரைப்படத்தின் ரிசல்ட் பார்த்த பிறகு அந்த டீலை நெட்பிளிக்ஸ் கேன்சல் செய்துவிட்டதாம்.

இதையும் படியுங்கள்... 50 வயதில் வாரிசு நடிகருடன் காதல்... திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானாரா மணிரத்னம் பட நடிகை?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
லேடி கில்லர் (திரைப்படம்)
சினிமா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே ஒரு கையெழுத்தால் 100 கோடியை இழந்த அஜித் பட நடிகை... 1000 படங்களில் நடித்தவருக்கு இந்த நிலைமையா?
Recommended image2
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image3
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved