ராஜா ராணி சீரியலில் இருந்து திடீர் என விலகும் வில்லி அர்ச்சனா..! அவருக்கு பதில் நடிக்க போவது யார் தெரியுமா?
'ராஜா ராணி 2' சீரியலில் தற்போது அழகிய வில்லியாக நடித்து வரும் அர்ச்சனா விலக உள்ளதாகவும், அவருக்கு பதில் நடிக்க உள்ள நடிகை பற்றிய தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற சீரியல்களில் ஒன்று 'ராஜா ராணி'. இதில் நாயகன் - நாயகியாக நடித்த, சஞ்சீவ் மற்றும் ஆல்யா இருவருமே நிஜமாக, காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதிக்கு இரு குழந்தைகளும் உள்ளது. திருமணம் ஆகி மகள் ஐலா பிறந்த பின்னர், ஆல்யா மீண்டும் 'ராஜா ராணி 2 ' என்கிற சீரியல் மூலம் மீண்டும், ரீ -என்ட்ரி கொடுத்தார்.
Diya Aur Baati Hum என்கிற ஹிந்தி சீரியலின், ரீமேக்காக எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போதே... ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாக ஆனதால், இந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது ஆல்யா-விற்கு பதில் ரியா விஸ்வநாதன் (சந்தியா) ஹீரோயினாக நடித்து வருகிறார். மிகவும் கட்டுக்கோப்பான குடும்ப பின்னணியில் இருந்து, எப்படி கதாநாயகி குடும்பத்தினர் சம்மதத்துடன் ஐபிஎஸ் போலீஸ் அதிகாரியாக மாறுகிறார் என்பதே இந்த சீரியலின் கதை.
மேலும் செய்திகள்: 'பாரிஜாதம்' பட ஹீரோயின்... நடிகர் பாக்யராஜ் மகள் சரண்யாவா இது? அடையாளமே தெரியலையே... லேட்டஸ்ட் போட்டோ!
மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில்... வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அர்ச்சனா. இவர் பக்காவாக பிளான் போட்டு, நாயகி சந்திகாவை கவிழ்க்க திட்டம் போட்டாலும், கடைசியில் அவை அனைத்தும் ஊத்தி கொண்டு காமெடியாக மாறிவிடும். எனவே இந்த அழகு வில்லி அர்ச்சனாவின் நடிப்பை ரசிப்பதற்காகவும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
archana
இந்நிலையில் 'ராஜா ராணி 2' சீரியலில் இருந்து இவர் விலக உள்ளதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அர்ச்சனாவுக்கு இவருக்கு பதில் யார் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 'ஈரமான ரோஜாவே' சீரியலில் நடித்த அர்ச்சனா குமார் தான், அர்ச்சனாவுக்கு பதில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: 14 வயதில் மகள் இருக்கும் நிலையில்... மீண்டும் குட் நியூஸ் சொன்ன நடிகர் நரேன்! வைரலாகும் புகைப்படம்!
அர்ச்சனாவின் 'ராஜா ராணி 2 ' சீரியலில் இருந்து விலக உள்ள தகவல் அவரது ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவர் திடீர் என இந்த சீரியலை விட்டு ஏன்? விலகுகிறார் என்கிற காரணமும் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.