ஏ.ஆர்.ரகுமான் பக்கத்தில் படுக்க மாட்டேன் என கூறிய மனைவி! கப்பு சிப்புனு கட் செய்த இசைப்புயல்!
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், தன்னுடைய நீளமான முடியை கட் செய்த ரகசியத்தை பல வருடங்கள் கழித்து தற்போது ஓப்பனாக கூறியுள்ளார். இந்த தகவலை அவருடைய ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
இந்திய திரையுலகில், முன்னணி இசையமைப்பாளராக தனக்கென தனி இடம் பிடித்துள்ளவர் ஏ.ஆர்.ரகுமான். பல மேடைகளில் ஒரு இந்தியனாக நம் நாட்டை பெருமை கொள்ள செய்தவர். ஆஸ்கர் கனவை எட்டிப் பிடிக்க முடியாதா? என இந்திய திரையுலகினர் ஏங்கி நின்ற போது, அசால்டாக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கி, இந்தியாவை மட்டும் அல்ல தமிழகத்தையும் தலை நிமிர வைத்த நாயகன் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான்.
இவர் ஆரம்பத்தில் இளையராஜாவிடம் உதவியாளராக இருந்தவர். இதன் பின்னரே இசையமைப்பாளராக மாறினார். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான 'ரோஜா' படத்தில் இசையமைக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே தன்னுடைய இசையால் ரசிகர்களை கவர்ந்தது மட்டும் இன்றி, சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றார்.
இவரின் படங்களில் இடம்பெறும் பாடல்கள் மற்றும் இசை, ரசிகர்களுக்கு எப்போதுமே வித்தியாசமான அனுபவங்களை கொடுத்து கொண்டே இருக்கும். இசையமைப்பாளர் என்பதை தாண்டி, பாடகராகவும் பல பாடல்களை பாடியுள்ளார். உள்நாடு முதல் வெளிநாடு வரை பல்வேறு இசை கச்சேரிகளையும் செய்து வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். இவரை தொடர்ந்து இவரின் மகள், இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ள நிலையில், விரைவில் இவரின் மகனும் இசையமைப்பாளராக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் ஏ ஆர் ரகுமான் கூறியுள்ள தகவல் அவரின் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமான போது, தன்னுடைய நீண்ட ஹேர் ஸ்டைலை மெயின்டெயின் செய்து வந்தார். இவரை பார்த்து இவரின் ரசிகர்கள் சிலர் இந்த ஹேர் ஸ்டைலுக்கு மாறினார்கள்.
பின்னர் திடீர் என தன்னுடைய முடியை வெட்டிக்கொண்டு ஷார்ட் ஹேர்க்கு மாறி பலரையும் ஆச்சர்யப்படுத்தினார். இது குறித்து, ஏ ஆர் ரகுமானிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் கூறியுள்ள பதில் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. "நீளமாக முடி வைத்திருந்தால் பக்கத்துல படுக்க மாட்டேன் என்று தன்னுடைய மனைவி சொல்லி விட்டதாகவும், நாங்கள் தான் இப்படி வைத்திருக்கிறோம் நீங்க ஏன் இப்படி முடி வச்சிருக்கீங்கன்னு கேட்டாங்க, என் முடி மேல அவங்களுக்கு ஒரு பொறாமை. பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும். அதனால தான் முடிய ஷார்ட்டா கட் பண்ணிட்டேன் என பேசி உள்ளார். இந்த பதிலை ஏ ஆர் ரகுமானின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.