MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சாம்பிளுக்கு பாட சொல்லி.. ஆண் பாடகர் குரலையே பெண்குரலாக மாற்றி ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த ஹிட்!

சாம்பிளுக்கு பாட சொல்லி.. ஆண் பாடகர் குரலையே பெண்குரலாக மாற்றி ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த ஹிட்!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், ஆண் பாடகரின் குரலை அப்படியே பெண் குரலாக மாற்றி சூப்பர் ஹிட் கொடுத்த பாடல் பற்றி உங்களுக்கு தெரியுமா?   

2 Min read
Author : manimegalai a
| Updated : Oct 29 2024, 02:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
AR Rahman song

AR Rahman song

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், 2017 ஆம் ஆண்டு மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான திரைப்படம் 'காற்று வெளியிடை' இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க, அதிதி ராவ் ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஏ ஆர் ரஹ்மான், இசையமைத்திருந்த இந்த படத்திற்கு... ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் தமிழில் மட்டுமின்றி, தெலுங்கிலும் 'செழியா' என்கிற பெயரில் வெளியானது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Kaatru Veliyidai Movie

Kaatru Veliyidai Movie

அதேபோல் இப்படத்தில் இடம்பெற்ற 'வான் வருவான்' பாடல், 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதை வென்றது. இப்பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளருக்காக ஏ ஆர் ரகுமானும், சிறந்த பின்னணி பாடகிக்காக சாஷா திருப்பதிக்கும் தேசிய விருது கிடைத்தது.

இந்திய விமான படையில் பணியாற்றும் கார்த்தி, விபத்து ஒன்றில் எதிர்பாராத விதமாக சிக்கும் நிலையில், அவருக்கு சிகிச்சை கொடுக்கும் மருத்துவர் அதிதி மீது காதல் ஏற்படுகிறது. இருவருக்கும் இடையே வலிமையான காதல் இருந்தாலும், அடுத்தடுத்து ஏற்படும் மோதல்கள் காரணமாக இருவரும் பிரிய நேர்கிறது.

'பாண்டியன் ஸ்டோர் 2' சீரியல்; சம்பள விஷயத்தில் நடிகர்களை மிஞ்சிய நடிகைகள்! முழு விவரம் இதோ!

35
Maniratnam Movie

Maniratnam Movie

கார்த்தி பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார். அங்கிருந்து கார்த்தி தப்பித்த பின்னர் அதிதியை சந்திக்கிறார். இருவரும் மீண்டும் இணைகிறார்களா? இவர்களின் உறவை இணைக்கும் பாலமாக இருக்கக்கூடிய விஷயம் எது? என எதிர்பாராத கிளைமேக்ஸுடன் இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருந்தார்.

இது சாமானிய மக்களுக்கான படம் இல்லை என சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதேபோல் இந்த படத்தில் திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொள்வது பற்றியும், உயர்மட்ட வர்க்கத்தை மையப்படுத்தி கதை அமைந்திருந்ததால்...  தமிழக ஆடியன்ஸ் மனதில் இப்படம் இடம்பிடிக்க முடியாமல் போனது. இதுவே இப்படத்தின் மிகப்பெரிய தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது.

45
Tamil cinema latest news

Tamil cinema latest news

இந்த படத்தில் ஆண் பாடகர் குரலை, பெண் குரலாக மாற்றி.... ஏ.ஆர்.ரகுமான் பயன்படுத்திய விஷயம் உங்களுக்கு தெரியுமா? ஆமாம் இந்த படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம் பெற்றிருந்தது, இதில் வைரமுத்து வரிகளில் கேட்கவே கொஞ்சம் வித்தியாசமான பாடலாக இருக்கும் 'டேங்கோ கேளாயோ' என்கிற பாடலில் தான் இந்த மேஜிக்கை ஏ.ஆர்.ரஹ்மான் செய்திருந்தார்.

மோதலில் ஆரம்பித்த காதல்; சன் டிவி சூப்பர் ஹிட் சீரியலில் உருவான புதிய லவ் ஜோடி?
 

55
Haricharan Voice

Haricharan Voice

'டாங்கோ கேளாயோ' பாடலை பாடி இருந்தவர் ஹரி சரண். இந்த பாடலை இவர் பாடி முடித்த பின்னர்... பெண் குரலில் பாட வேண்டிய சில வரிகளை, பெண் குரலில் பாட வருபவர்களிடம் போட்டுக்காட்ட, சாம்பிள் வாய்ஸ் நீங்களே பாடுங்கள் என ஏ.ஆர்.ரகுமான் கூற.. ஹரி சரண் அந்த வரிகளை பாடியுள்ளார். பின்னர் பெண் பாடகியை வைத்து பாட வைக்காமல் ஹரி சரண் குரலையே தொழில்நுட்பத்தில் பெண் குரலாக மாற்றி பயன்படுத்தி விட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். படம் தோல்வி அடைந்திருந்தாலும், இப்படத்தில் உள்ள அணைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஏ. ஆர். ரகுமான்
கார்த்தி (நடிகர்)
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved