- Home
- Cinema
- Anna Serial: இசக்கிக்கு கொடுத்த மருந்தில் விஷம்! பிரச்சனையில் சிக்கிய வீரா - அண்ணா சீரியல் அப்டேட்!
Anna Serial: இசக்கிக்கு கொடுத்த மருந்தில் விஷம்! பிரச்சனையில் சிக்கிய வீரா - அண்ணா சீரியல் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், அண்ணன் - தங்கைகள் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலின் இன்றைய அப்டேட் குறித்த தகவல், தற்போது வெளியாகி உள்ளது.

சண்முகத்திற்கு சௌந்தரபாண்டி மீது எழுந்த சந்தேகம்:
'அண்ணா' சீரியலின் நேற்றைய எபிசோடில், பாக்கியத்தின் விருப்பப்படி இசக்கிக்கு மருந்து கொடுக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சண்முகத்திற்கு திடீர் என சௌந்தரபாண்டி மீது சந்தேகம் எழுந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.
Soundharapandi Drama
மருந்தில் விஷம்:
அதாவது, இசக்கிக்கு மருந்து கொடுக்க நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், சண்முகம் இசக்கிக்கி மருந்து கொடுக்க வேண்டாம் அதில் விஷம் கலந்து இருக்கு என்று சொல்ல, அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைகிறார்கள். சௌந்தரபாண்டி தான் ஏதோ அதுல கலந்திருக்கிறார் என சொல்ல... ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கிறார்கள். சௌந்தரபாண்டி என் பேரனுக்கு நானே எப்படி விஷம் கொடுப்பேன் என அழுகாத குறையாக சொல்ல, அப்படினா முதலில் நீ இந்த மருந்தை குடி என்று சண்முகம் சொல்ல சௌந்தரபாண்டி நான் எதுக்குலே குடிக்கணும் என்று ஒரு குட்டி ட்ராமாவை அரங்கேற்றுகிறார்.
Anna சீரியல்: இசக்கிக்கு கொடுத்த மருந்தில் விஷம்! பிரச்சனையில் சிக்கிய வீரா - அண்ணா சீரியல் அப்டேட்!
Bhakiyam Doubt
பாக்கியத்திற்கு வந்த டவுட்:
அதனை தொடர்ந்து பாண்டியம்மாவிடம் நீ குடி அக்கா என்று சொல்ல, அவர் எனக்கு இதெல்லாம் வேண்டாம் என கூறிவிட்டு எஸ்கேப் ஆகிறார்... அடுத்து சனியனிடம் குடிக்க சொல்ல, அவனும் முடியாது என மறுக்கிறான். பின்னர் சௌந்தரபாண்டி பாக்கியத்தை குடிக்க செல்கிறார். பாக்கியம், எனக்கு உங்க மேல இவ்வளவு நேரம் எந்த ஒரு டவுட்டும் வரல இப்போ தான் வருகிறது என கூறி அதிர்ச்சி கொடுக்கிறார்.
Soundarapandi Drink Medicine:
மருந்தை குடிக்கும் சௌந்தர பாண்டி:
இதை தொடர்ந்து சௌந்தர பாண்டி, நீங்க யாரும் இதை குடிக்க வேண்டாம். உங்களுக்கு என் மேல தானே சந்தேகம் நானே குடிக்கிறேன் என்று சொல்ல சௌந்தரபாண்டி அந்த மருந்தை குடித்து விட்டு நெஞ்சை பிடித்து உட்காருவது போல் ஆக்ஷன் செய்து சிரிக்கிறார். பிறகு இசக்கிக்கு மருந்து கொடுக்கப்படுகிறது.
Anna Serial: சண்முகத்தால் பீல் பண்ணும் பரணி; அடுத்த பிரச்சனை பண்ண அலர்ட் ஆன சௌந்தரபாண்டி!
Veera Meet New Problem
வீராவை பழிவாங்குவதில் குறியாக இருக்கும் வைஜெந்தி:
மற்றொருபுறம், வீராவை பழிவாங்குவதில் குறியாக இருக்கும் வைஜெந்தி, ரவுடிகள் மூலம் ஒரு பெண்ணின் நகையை பறித்து அதை வீராவின் பையில் போட்டு விடுகின்றனர். அடுத்து அந்த பெண் நகையை காணவில்லை என சத்தம் போட வீரா வண்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு விட சொல்கிறாள். ஸ்டேஷனில் அனைவரது பையிலும் போலீசார் சோதனை செய்து கொண்டிருக்க... வைஜெந்தியின் சூழ்ச்சியில் வீரா சிக்குவாரா? அடுத்து என்ன நடக்கும் என்பது நாளை தெரியவரும்.