Anna Serial: சண்முகத்தால் பீல் பண்ணும் பரணி; அடுத்த பிரச்சனை பண்ண அலர்ட் ஆன சௌந்தரபாண்டி!
சண்முகம் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லுவான் என பரணி எதிர்பார்த்து ஏமார்ந்த நிலையில் இன்று என்ன நடக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.

'அண்ணா' சீரியல்:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரான, 'அண்ணா' சீரியலில், இன்றைய எபிசோடில், என்ன நடக்க போகிறது என்பது பற்றி பார்ப்போம்.
கோவிலுக்கு போக சொல்லும் பாக்கியம்:
பரணியின் பிறந்தநாள் வருவதால் பாக்கியம் அவளுக்கு போன் செய்து, நாளைக்கு உனக்கு பொறந்தநாள் மறக்காமல் சண்முகத்தையும் கூட்டிட்டு கோயிலுக்கு போயிட்டு வா என்று சொன்ன பிறகு தான், அவளுக்கு தன்னுடைய பிறந்தநாள் நினைவுக்கு வருகிறது.
Anna Serial: கையில் தாலியோடு வீராவை துரத்தும் வெங்கடேஷ்; எதிர்பாராத திருப்பங்களுடன் 'அண்ணா' சீரியல்!
சண்முகத்தை சந்தோசம்:
சண்முகம் மிகவும் சந்தோஷமாக ரூமுக்குள் வர, என்ன இன்னைக்கு நீ ரொம்ப சந்தோஷமா இருக்க போல என்று பரணி கேட்க. சண்முகம் இருக்காதா பின்ன, ரத்னாவோட வாழ்க்கையில இருந்த பிரச்சினை நல்லபடியா முடிஞ்சது அதுவே பெரிய சந்தோசம் தானே என கூறுகிறான்.
பரணியின் ஆதங்கம்:
பரணி, சூசகமாக நாளைக்கு என்ன நாள் தெரியுமா? என்று கேட்க சண்முகம் நாளைக்கு என்ன ஒன்னும் இல்லையே என சொல்ல பரணி அதை நினைத்து கவலை படுகிறாள். தங்கச்சிகளை பத்தி மட்டும் தான் நீ எப்போதுமே யோசிப்ப என்ன பத்தியெல்லாம் எங்க நினைக்க போற அப்படி என்று மனதிற்குள்ளேயே நினைத்து கொள்கிறாள்.
Anna Serial: வெங்கடேஷ் நெஞ்சில் காலை வைத்த சண்முகம்; பஞ்சாயத்தில் நடிக்க போவது என்ன?
சௌந்தர பாண்டி திட்டம்
சண்முகத்துக்கு பரணியின் பிறந்தநாள் நியாபகம் இல்லை என்பதையே ஒரு காரணமாக வைத்து, அவரை பழிவாங்க சௌந்தரபாண்டி திட்டம் போடும் நிலையில், பரணியின் பிறந்த நாள், கனி மூலம் சண்முகத்துக்கு தெரிய வருகிறது. எனவே பரணிக்கே தெரியாமல் தங்கத்தில் செயின் வாங்கி கொடுத்து, அவளை சர்பிரைஸ் பண்ண நினைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பது பற்றி அறிய தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அண்ணா சீரியலை பாருங்கள்.