- Home
- Cinema
- விஜயகாந்த் கூட சூப்பர் ஹிட் படத்துல நான் தான் நடிக்கவேண்டியது; அனிதா புஷ்பவனம் பகிர்ந்த தகவல்!
விஜயகாந்த் கூட சூப்பர் ஹிட் படத்துல நான் தான் நடிக்கவேண்டியது; அனிதா புஷ்பவனம் பகிர்ந்த தகவல்!
விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்துல, ரேவதி நடித்த ரோலில் நடிக்க வேண்டியது நான் தான் என்று அனிதா புஷ்பவனம் குப்புசாமி கூறியுள்ளார்.

Anitha Kuppusamy
விஐயகாந்த் நடிப்பில் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களில் ஒன்று தான் வைதேகி காத்திருந்தார். இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த், ரேவதி, கவுண்டமனி, செந்தில், பிரமிலா ஜோஷாய், உசிலமணி, ராதா ரவி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இதில், விஜயகாந்த் முதலில் நடிகை பிரமிளா ஜோஷாயை காதலிக்க, திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில் விளையாட்டு வினையாக தற்கொலை செய்து கொள்வார்.
Vijayakanth Movie
இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த ரேவதி, திருமணத்திற்கு பின் கணவருடன் படகு செல்லும் போது அந்த படகு விபத்தில் சிக்கியதால் கணவனை இழந்த பெண்ணாக வாழ்த்து வருவார். அவரைக் பார்க்க பார்க்க சோகத்திற்கு உள்ளாகும் அவரது தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார். வெள்ளைச்சாமியான விஜயகாந்த் பிழைப்புக்காக கோயிலில் வேலை பார்க்கிறார். அந்த கோயிலில் தன்னுடைய காதலியின் பெயரான வைதேகி வைதேகி என்று எழுதி வைக்கிறார்.
ஐஸ்வர்யா ராய்க்கு இப்படி ஒரு பழக்கம் இருக்கு? பிடிக்காத விஷத்தை ஓபனாக கூறிய நாத்தனார்!
Vaidhegi Karthirunthal
இதையறிந்த ஊரார் புறம் பேச ஆரம்பிக்கிறார்கள். இது குறித்து ரேவதி கேட்டு தெரிந்து கொள்கிறாள். இதையடுத்து அந்த ஊரில் வேலைக்கு வரும் இளைஞனும், அந்த ஊரைச் சேர்ந்த ரௌடியின் சகோதரியும் காதலிக்கிறார்கள். ரௌடி அண்ணனால், அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அதன் பிறகு விஜயகாந்த் மற்றும் ரேவதி இருவரும் இணைந்து அவர்களை சேர்த்து வைக்க போராடுகிறார்கள். அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? வெள்ளைச்சாமியான விஜயகாந்திற்கு என்ன நடந்தது என்பது தான் படத்தோட கதை.
Revathi
இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதோடு 100 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனையும் படைத்தது. இந்த படத்தை இயக்குனரும் - நடிகருமான ஆர் சுந்தர் ராஜன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் மிகப்பெரிய பலம் இளையராஜாவின் இசை தான். இந்நிலையில் இந்த ஹிட் படத்தை மிஸ் பண்ணிவிட்டதாக வேதனையோடு கூறி உள்ளார், அனிதா புஷ்பவனம் குப்புசாமி.
திருணம் ஆன 2 வருடங்களுக்கு பின் சன் டிவி சீரியல் நடிகை ப்ரீத்தி குமார் கூறிய குட் நியூஸ்!
Pushpavanam Kuppusamy
இந்தப் படத்தில் ரேவதி ரோலில் முதலில் நடிக்க இருந்தது அனிதா தானம். இந்த படத்திற்கு ஹீரோயினை தேர்வு செய்யும் பொறுப்பை சுந்தர் ராஜன், அவரின் பரதநாட்டிய மாஸ்டரிடம் தான் கொடுத்தாராம். ஆனால், அனிதாவின் வீட்டில், ஏற்கனவே பாட்டு கிளாஸூக்கு கூட செல்வதற்கு பெரும் போராட்டமாக இருந்ததாம். அந்த சூழலில் எப்படி சினிமாவில் நடிக்க ஓகே சொல்லுவாங்க என்பதை எண்ணி இந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.