அனிருத்துக்கு பொண்ணு கிடைக்கலையா? திருமணம் பற்றி மனம் திறந்த அம்மா!
தமிழ் திரையுலகில் பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நிலையில், அதுபற்றி அவரது அம்மா நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருக்கிறார்.

கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அனிருத்தின் திருமணம் பற்றி அவருடைய அம்மா லட்சுமி ரவிச்சந்திரன் மனம்திறந்து பேசி உள்ளார்.
Anirudh
3 படம் மூலம் அறிமுகமான அனிருத், தற்போது விஜய், ரஜினி, கமல் என டாப் நடிகர்களின் படங்களுடன் செம பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். அவர் தொட்டதெல்லாம் ஹிட் அடிப்பதால், கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக உலா வருகிறார். தற்போது அனிருத் கைவசம் விஜய்யின் ஜனநாயகன், ரஜினிகாந்தின் கூலி, கமலின் இந்தியன் 3 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் பணியாற்றி வருகிறார் அனி.
Anirudh Ravichander
தற்போது இசையமைப்பாளர் அனிருத்துக்கு 34 வயது ஆகிறது. இத்தனை வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார் அனிருத். ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியா மீது காதல் வயப்பட்டு, பின்னர் அந்த காதல் பிரேக் அப்பில் முடிந்த நிலையில், அதன்பின் எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்து வரும் அனிருத், திருமணத்தை மட்டும் தள்ளிப்போட்டு வருகிறாராம். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அனிருத்தின் அம்மா லட்சுமி ரவிச்சந்திரன் தன் மகனின் திருமணம் பற்றி பேசி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... சிம்புவுக்கு நோ சொல்லிவிட்டு; தனுஷுக்கு ஓகே சொன்ன அனிருத்!
Music Director Anirudh
அவர் கூறியதாவது : “அனிருத்தின் திருமணம் கடவுள் அருளால் எவ்வளவு சீக்கிரம் நடக்கிறதோ அவ்வளவு நல்லது. அவரின் மனதை புரிந்துகொள்ளும்படியான பெண், அதேபோல் அவனுடைய டைமிங்கை புரிந்துகொள்ளும் பெண் கிடைக்க வேண்டும். கிரியேட்டிவ் ஃபீல்டில் இருப்பவர்களுக்கு மன அமைதி ரொம்ப ரொம்ப முக்கியம். சொல்லப்போனால் நான் இன்றளவும் அவனை ஒரு குழந்தையாக தான் பொத்தி பொத்தி வளர்த்து வருகிறேன்.
Anirudh Marriage
அவன் மனசு கஷ்டப்படுகிற மாதிரி எதுவும் சொல்லமாட்டேன். அனிருத்தின் ஸ்டூடியோவை நான் தான் கவனித்து வருகிறேன். அவனுடைய ஷெட்யூலை பார்த்துக் கொள்கிறேன். அவனுடன் வேலை பார்த்தாலும் ஒரு லைனை கிராஸ் பண்ணக் கூடாது என நினைப்பேன். அவனுக்கு சீக்கிரம் ஒரு பொண்ணு கிடைக்கனும்” என அனிருத்தின் அம்மா அந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அனிருத்துக்கு இன்னும் பொண்ணு கிடைக்கவில்லையா என ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... நானி, விஜய் தேவரகொண்டா படங்களுக்கு டிமிக்கி கொடுத்து வரும் அனிருத், 4 படங்களின் நிலை என்ன?