MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜிவி பிரகாஷ் மீது கடுப்பில் இருக்கிறாரா அனிருத்? அமரன் பார்த்து அவர் சொன்னதை பாருங்க!

ஜிவி பிரகாஷ் மீது கடுப்பில் இருக்கிறாரா அனிருத்? அமரன் பார்த்து அவர் சொன்னதை பாருங்க!

சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தை பார்த்த கையோடு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து அனிருத் போட்ட எக்ஸ் தள பதிவு சர்ச்சையில் சிக்கி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 08 2024, 02:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
GV Prakash, Anirudh

GV Prakash, Anirudh

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடித்திருந்த படம் அமரன். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் படமாக அமரன் உருவாகி இருந்தது.

24
Sivakarthikeyan, Sai Pallavi

Sivakarthikeyan, Sai Pallavi

மேஜர் முகுந்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அப்படியே கண்முன் கொண்டுவந்து காட்டி இருந்தார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. மேலும் அவரது கதாபாத்திரத்தில் நடித்தார் என்று சொல்வதை விட சிவகார்த்திகேயன் வாழ்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு கச்சிதமாக பொறுந்தி இருந்தார் எஸ்.கே. அமரன் படம் பார்த்து பாராட்டாத ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும், ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களும் படத்தை பார்த்து சிலாகித்து பேசி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்.. அமரன் இல்ல; தீபாவளி ரிலீஸில் வேற வெவல் படம் இதுதான் - பாராட்டி தள்ளிய தனுஷ்

34
Amaran Movie

Amaran Movie

குறிப்பாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் நாளே அமரன் படத்தை பார்த்துவிட்டு, அதன் கிளைமாக்ஸ் காட்சிகள் தன்னை கலங்க வைத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியிடம் தெரிவித்தார். இதையடுத்து நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, நடிகர் சிவக்குமார், நடிகர் சிம்பு, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரும் படத்தை பாராட்டி தள்ளினர். இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தும் அமரன் படம் பார்த்த பின்னர் அதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

44
Anirudh X post about Amaran Movie

Anirudh X post about Amaran Movie

அந்த பதிவில், அமரன் பெஸ்ட் சினிமா, என்னுடைய சிவகார்த்திகேயனை நினைத்து பெருமைப்படுகிறேன். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் அவரது குழுவினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். கமல்ஹாசன், மகேந்திரன் மற்றும் டிஸ்னி ஆகியோருக்கு சல்யூட் என பதிவிட்டு இருந்தார். அமரன் படத்தை பாராட்டி அவர் இந்த பதிவை போட்டிருந்தாலும் அதுவே அவருக்கு வினையாக மாறி இருக்கிறது.

அமரன் படத்திற்கு முதுகெலும்பாக இருந்ததே அப்படத்தின் இசை தான். அதற்காக ஜிவி பிரகாஷை ஒரு இடத்தில் கூட வாழ்த்தாமல் அனிருத் போட்டுள்ள இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள். ஒரு இசையமைப்பாளராக இருந்துகொண்டு சக இசையமைப்பாளரை கண்டுகொள்ளாமல் இருக்கலாமா என கேள்வி எழுப்பி வருவதோடு, ஜிவி பிரகாஷ் மீது அப்படி என்ன வன்மம் அனிருத்துக்கு என பலரும் சாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்.. அமரன் படத்திற்கு முன்பே, தன் படத்தில் முகுந்தனுக்கு மரியாதை செலுத்திய கோலிவுட் நடிகர் - யார் அவர்?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அனிருத் ரவிச்சந்தர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
திரையுலகின் ரியல் ஹீரோ! மறைந்த இயக்குநரின் மகளுக்கு உதவிய யோகி பாபு - குவியும் பாராட்டுக்கள்!
Recommended image2
கென் கருணாஸ் இயக்கிய படத்திற்கு தளபதி பட தலைப்பு! விஜய் மீது கொண்ட பாசத்தால் வைத்த அந்த பெயர் - வைரலாகும் தகவல்!
Recommended image3
திருமணத்திற்குப் பிறகு செம பிஸி! ராஷ்மிகா மந்தனா கையில் வரிசையாக 6 மெகா படங்கள் - 'நேஷனல் கிரஷ்' அதிரடி!"
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved