MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சீக்ரெட்டா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... இம்முறை விவாகரத்துக்கு வாய்ப்பே இல்ல - அதிர்ச்சி கொடுத்த வனிதா

சீக்ரெட்டா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... இம்முறை விவாகரத்துக்கு வாய்ப்பே இல்ல - அதிர்ச்சி கொடுத்த வனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகை வனிதா, யாருக்கும் தெரியாமல் மீண்டும் திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்திருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 18 2023, 08:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vanitha

Vanitha

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, தமிழ் திரையுலகில் ஹீரோயினாக நடித்துள்ளார். விஜய், ராஜ்கிரண் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள வனிதா, திருமணம் செய்துகொண்ட பின்னர் சினிமாவை விட்டு விலகினார். வனிதாவுக்கு கடந்த 2000-ம் ஆண்டு முதல் திருமணம் நடைபெற்றது. அவர் நடிகர் ஆகாஷை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஸ்ரீஹரி என்கிற ஒரு மகனும் உள்ளார். 2007-ம் ஆண்டு ஆகாஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் வனிதா.

24
Vanitha

Vanitha

ஆகாஷை பிரிந்த உடனே ஜெய் ராஜன் என்கிற தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் வனிதா. பின்னர் அவரை அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். இந்த ஜோடிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. பின்னர் தந்தை விஜயகுமாருடன் பிரச்சனை ஏற்பட்டதால் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழ்ந்து வந்தார் வனிதா. அந்த சமயத்தில் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டருக்கும் வனிதாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு பின்னர் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்தனர்.

இதையும் படியுங்கள்... பிறந்தநாளில் நற்பணி மன்றம் துவங்கிய விஷ்ணு விஷால்! அவரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

34
Vanitha

Vanitha

இதையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட வனிதா, அந்நிகழ்ச்சியில் அதகளம் செய்து டிஆர்பி-யை எகிற வைத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆன வனிதா மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டார் வனிதா. வழக்கம்போல் அவரையும் திருமணமான மூன்றே மாதத்தில் விவாகரத்து செய்து விரட்டிவிட்டார்.

44
Vanitha

Vanitha

இப்படி திருமணத்துக்கும் வனிதாவுக்கும் செட்டே ஆகாமல் இருந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் திருமணம் செய்துகொண்டதாக பேட்டி ஒன்றில் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் வனிதா. இது எப்போ என அனைவரும் பதறிப்போக, அதற்கு விளக்கமும் கொடுத்திருக்கிறார் வனிதா. அதன்படி, அவர் தற்போது சினிமாவை தான் காதலித்து திருமணம் செய்துள்ளாராம். இனி தன்னுடைய முழு கவனமும் சினிமாவில் தான் இருக்கும், அதனால் இனி விவாகரத்திற்கு வாய்ப்பே இல்லை என கூறி இருக்கிறார் வனிதா. 

இதையும் படியுங்கள்... 'ஐ' பட வில்லன் சுரேஷ் கோபி மகளுக்கு எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஷ்மிகாவை விட விஜய் தேவரகொண்டா இத்தனை வயசு மூத்தவரா? வெளிவந்த வயது வித்தியாசம்
Recommended image2
தாய் கிழவி முதல் தடயம் வரை... பிப்ரவரி 27ல் தியேட்டர் & OTT-ல் புது ரிலீஸ் என்னென்ன?
Recommended image3
நான் யாரையும் காலி பண்ண வரல; எனக்கு சிலர் தடை போடுறாங்க..! புயலை கிளப்பிய சிவகார்த்திகேயன் ஸ்பீச்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved