- Home
- Cinema
- வாழ்க்கையில் இரண்டு... மூன்று காதல் வந்தால் என்ன தப்பு? ரசிகரின் கேள்விக்கு டிடியின் நச் விளக்கம்!
வாழ்க்கையில் இரண்டு... மூன்று காதல் வந்தால் என்ன தப்பு? ரசிகரின் கேள்விக்கு டிடியின் நச் விளக்கம்!
நிஜ வாழ்க்கையில் இரண்டு, மூன்று காதல் வந்தால் தப்பே இல்லை என கூறி, தன்னுடைய பார்வையில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் தொகுப்பாளினி டிடி.

வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு நிகராக, சீரியல் நடிகர்களையும், தொகுப்பாளர்களையும் ரசிகர்கள் ரசிக்க துவங்கி விட்டனர். எனவே அவர்கள் பற்றிய தகவல் ஏதாவது வெளிவந்தால் அது வைரலாகி விடுகிறது. சரி டிடி-யிடம் ரசிகர் ஒருவர் காதல் பற்றி கேள்வி எழுப்ப அதற்க்கு கூலாக பதிலளித்துள்ளார் திவ்யா தர்ஷினி.
உங்கள் தீர்ப்பு என்கிற நிகச்சியை இளம் வயதியிலே தொகுத்து வழங்கிய டிடி, பின்னர் சீரியலில் நடிக்க துவங்கினார். அதன்படி, ராஜ் டிவியில் ஒளிபரப்பான இரண்டாவது கடமை, ரெக்கை கட்டிய மனசு, சன் டிவியில் ஒளிபரப்பான அகல்யா, தடயம், செல்வி, கோலங்கள், அரசி ஆகியவை. அப்படியே தொகுப்பாளர் பணியிலும் ஆர்வம் காட்டிய திவ்யா தர்ஷினி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1, பாய்ஸ் vs கேர்ள்ஸ், காபி வித் டிடி, அச்சம் தவிர, அன்புடன் டிடி, என்கிட்ட மோதாதே போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.
கவர்ச்சி குயினாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்! மோசமான கிளாமர் உடையில்.. இணையத்தை பற்றி எரிய வைத்த போட்டோஸ்!
பிஸியான தொகுப்பாளராக இருக்கும் போதே, தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஸ்ரீ காந்த் என்பவரை கடந்த 2014-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் வெகு விமர்சியாக நடந்தாலும், பின்னர் சில வருடங்களிலேயே விவாகரத்தில் முடிந்தது.
மேலும் இவருக்கு காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அதிக நேரம் நின்று கொண்டே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாது என்பதால், நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதை குறைத்துக் கொண்டார். கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக பெரிய படங்களின் ஆடியோ லான்ச் மற்றும் அவார்ட் நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.
அதே போல் சின்னத்திரையில் இருந்து விலகி, வெள்ளித்திரையில் ஆர்வம் காட்டி வருகிறார். அவ்வப்போது போட்டோ விதவிதமான போட்டோ ஷூட் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடும் டிடி, ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்திலும் கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், ரசிகர் ஒருவர் 'Do you believe in second love in life?' என டிடியிடம் கேள்வி ஒன்றை முன்வைக்க, அதற்க்கு பதிலளித்த திவ்யா தர்ஷினி... அதென்ன இரண்டாவது காதல்? காதல் என்பது ஒருவருக்கு இரண்டு முறை தான் வர வேண்டும் என்று ஏதாவது உள்ளதா? அதெல்லாம் சினிமாவில் சொல்லுவது. நிஜ வாழ்க்கையில் ஒருவருக்கு ஒரே சமயத்தில் 4 அல்லது 5 காதல் வருவது தான் தவறு. ஒருவரது வாழ்க்கையில் இரண்டு அல்லது 3 முறை காதல் வருவதில் என்ன தவறு. என பதிலளித்துள்ளார்.