கமல்ஹாசனின் செயலால் விமர்சனங்களுக்கு ஆளான 'அமரன் 100-வது' நாள் வெற்றி கொண்டாட்டம்!
உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 100-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இந்த படத்தின் வெற்றி விழா தற்போது கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு தற்போது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் விமர்சனத்தை பெற்று வருகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன்:
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம், தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜிவி பிரகாஷ் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இன்றி BGM ம்யூசிக்கிலும் மிரட்டி இருந்தார்.
கமல்ஹாசனுக்கு இரட்டிப்பு லாபம்
கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில், ரூ.100 முதல் ரூ.120 கோடி வரையிலான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் கமல்ஹாசனுக்கு இவர் போட்ட பணத்தைவிட இரண்டு மடங்கு அதிகமான லாபத்தை பெற்று கொடுத்தது.
'ஃபயர்' ஆடியன்ஸ் மத்தியில் பத்தி எரிந்ததா? பல்பு வாங்கியதா - ரசிகர்கள் விமர்சனம்!
ராணுவ வீரரான நடித்திருந்த சிவகார்த்திகேயன்
அதேபோல் இதுவரை காமெடி கலந்த கதாபாத்திரங்களிலும், கமர்சியல் மற்றும் ஆக்சன் படங்களிலும் நடித்து வந்த சிவகார்த்திகேயன், இந்த படத்தில் முழுக்க முழுக்க ஒரு சீரியஸான ரோலில், ராணுவ வீரராக நடித்திருந்தார். இந்த படத்திற்காக உண்மையாகவே ராணுவ வீரர்கள் பயிற்சி பெரும் அனைத்து பயிற்சிகளையும் பெற்று தான் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை இந்த படத்திற்கு கொடுத்திருந்தார் சிவகார்த்திகேயன். இதுவே இந்த படத்தின் வெற்றிக்கு வித்திட்டது.
அமரன் 100-ஆவது நாள் வெற்றி கொண்டாட்டம்
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்த படம், தற்போது வெற்றிகரமாக 100 நாட்களை எட்டி உள்ள நிலையில், இதனை கொண்டாடும் விதமாக இன்று சென்னையில் பட குழுவினர் அமரன் 100-ஆவது நாள் வெற்றி கொண்டாட்டத்தை கலைவாணர் அரங்கில் கொண்டாடி வருகின்றனர்.
சினிமாவுக்காக விவாகரத்து; இன்று திரையுலகை விட்டு விலகும் முடிவில் மிஷ்கின்! என்ன காரணம்?
கமல்ஹாசன் செயலை விமர்சிக்கும் மீடியாக்கள்:
இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்து இருந்தாலும், கமலஹாசனின் செயல் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் விமர்சனங்களை பெற்று வருகிறது. அமரன் திரைப்படம், இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற மீடியாக்களின் பங்களிப்பு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இன்று நடைபெறும் சக்சஸ் மீட் குறித்து எந்த ஒரு மீடியாவுக்கும் தயாரிப்பாளரான கமலஹாசன் அழைப்பு விடுக்காததே இந்த விமர்சனத்திற்கு காரணம். எனவே பத்திரிக்கையாளர்கள் பலர் கமலஹாசன் செயல் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக தங்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.