'ஃபயர்' ஆடியன்ஸ் மத்தியில் பத்தி எரிந்ததா? பல்பு வாங்கியதா - ரசிகர்கள் விமர்சனம்!
பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் உருவாகியுள்ள, திரில்லர் படமான 'ஃபயர்' படத்தின் விமர்சனம் குறித்து பார்ப்போம்.

பாலாஜி முருகதாஸ் நடித்துள்ள 'ஃபயர்' :
பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ஜே.எஸ்.கே இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் தான் 'ஃபயர்'. பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முதல் ரன்னரப்பாகவும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, டைட்டில் பட்டத்தையும் பெற்ற, பாலாஜி முருகதாஸ், 'ஃபயர்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார்.
ரச்சிதா மகாலட்சுமி:
இவருக்கு ஜோடியாக, சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமாகி, உப்பு கருவாடு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளாள் ரச்சிதா மகாலட்சுமி, கதாநாயகியாக நடித்துளளார். இதுவரை குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்துள்ள ரச்சிதா இந்த படத்தில் அளவுகடந்த கவர்ச்சியில்நடித்துள்ளார் . இந்த் படத்தில் இருந்து அண்மையில் ரிலீஸ் ஆன மெதுமெதுவாய் பாடலில், ஓவர் கவர்ச்சி காட்டிய நிலையில் இது விமர்சனங்களுக்கு ஆளானது. பல ரசிகர்கள் காசுக்காக ரச்சிதா இப்படி இறங்கி விட்டாரே என நேரடியாகவே விமர்சித்திருந்தனர்.
காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம்:
மேலும் இவர்களை தவிர இந்த படத்தில், சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன் உள்ளிட்ட நடிகர்களும்... ஏராளமான புதுமுகங்களும் நடித்துள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம், காதலர் தின ஸ்பெஷலாக... இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
பெண்களுக்கான விழிப்புணர்வு:
பெண்களின் விழிப்புணர்வை மைய கருத்தாக கொண்டு ரிலீஸ் ஆகியுள்ள 'ஃபயர்' திரைப்படம், எப்படி இருக்கிறது என ரசிகர்கள், தங்களுடைய கருத்தை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். இன்றைய தினம் மொத்தம் 11 ஸ்மால் பட்ஜெட் படங்கள் வெளியாகி உள்ளதால், 'ஃபயர்' படத்திற்கு குறைந்த அளவிலான திரையரங்குகளே கிடைத்துள்ளன. அதன்படி தற்போது இந்த படம் குறித்து விமர்சனங்களை தெரிவித்து வரும் ரசிகர்கள், 'ஃபயர்' திரைப்படம் ஒரு சிறந்த விழிப்புணர்வு திரைப்படம் என கூறி வருகிறார்கள்.
ரசிகர்களின் விமர்சனம்:
குறிப்பாக பெண்கள் இந்த படங்களை பார்க்க வேண்டும். இந்த் காலத்தில் பெண்களுக்கு எதிராக... அவர்கள் மேற்கொள்ளும் பிரச்னையை பற்றி இந்த படம் பேசுகிறது. ஒவ்வொரு நொடியும் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் உள்ளது. தேவையான இடத்தில் கவர்ச்சி இருந்தாலும், கதையோடு பார்க்க அது ஆபாசமாக இல்லை என கூறுகிறார்கள். என கூறி வருகிறார்கள். பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்த படத்தின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு... வசூலும் சூடு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.