- Home
- Gallery
- Fire : "அவை எல்லாமே வெளியே வரும்".. அனல் பறக்கும் "Fire" பட பிரச்சனை - ரஷிதாவை வறுத்தெடுக்கும் தயாரிப்பாளர்!
Fire : "அவை எல்லாமே வெளியே வரும்".. அனல் பறக்கும் "Fire" பட பிரச்சனை - ரஷிதாவை வறுத்தெடுக்கும் தயாரிப்பாளர்!
Rachitha Vs Producer Sathish : பாலாவின் பரதேசி படம் உள்பட பல நல்ல படங்களை தயாரித்து வெளியிட்ட நிறுவனம் தான் JSK Film Corporation, அதன் நிறுவனர் தான் சதிஷ்.

rachitha
தமிழ் மற்றும் கன்னட மொழியில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் சீரியல் நடிகையாக திகழ்பவர் தான் ரஷிதா மஹாலக்ஷ்மி. அவ்வப்போது சில படங்களிலும் இவர் நடிப்பதுண்டு, கடந்த 2015ம் ஆண்டு வெளியான "உப்பு கருவாடு" என்ற படத்தில் கூட இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இறுதியாக கடந்த 2023ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில், 91 நாள்கள் BB வீட்டில் தங்கி, அதன் பிறகு எலிமினேட் ஆனார்.
மூக்குத்தி அம்மன் 2 படத்தில் ஆர்.ஜே பாலாஜி இல்லையா? நயன்தாரா ஏன் இப்படி பண்ணாங்க?
Actress Rachitha
இந்நிலையில் FIRE என்ற படத்தில் அண்மையில் நடித்து முடித்துள்ளார் ரஷிதா, அதே படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலாஜி முருகதாஸும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாலாஜி மற்றும் ரஷிதா ஆகிய இருவரும், FIRE படத்தில் நடித்ததற்கு, அப்படத்தின் தயாரிப்பாளர் JSK சதிஷ், தங்களுக்கு ஒரு பைசா கூட சம்பளம் வழங்காமல், ஏமாற்றிவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டையும் முன்வைத்தனர்.
Balaji
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றில் கூட, தயாரிப்பாளர் சதிஷ் குறித்து புகார் தெரிவித்த பாலாஜியின் பதிவை மேற்கோள்காட்டி, சதீஷால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர் இவர் என்று கூறியுள்ளார் ரஷிதா. இந்நிலையில் இவர்கள் இருவரின் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் இரு பதிவுகளை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் JSK சதிஷ்.
JSK Sathish
தயாரிப்பாளர் சதீஷ் வெளியிட்ட பதிவில், ரஷிதா இந்த திரைப்படத்திற்கு சம்பளம் வாங்கிக் கொண்டுதான் நடித்ததாகவும், இனாமாக ஒன்றும் நடித்துக் கொடுக்கவில்லை என்றும், அதற்கான அக்ரீமெண்ட் தன்னிடம் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ள வேண்டாம், தேவைப்பட்டால் எல்லாவற்றையும் நான் சோசியல் மீடியாவில் போட தயாராக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
அடுத்த ஹீரோயின் ரெடி.. அழகில் அம்மாவையே மிஞ்சிய நடிகை மஞ்சு வாரியரின் மகள்.. க்யூட் போட்டோஸ்..