டீசர் ரெடி... புஷ்பா 2 படத்தை உலகளவில் ரீச் செய்ய அல்லு அர்ஜுன் போட்ட பக்கா பிளான்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் புஷ்பா 2 படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீசான படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படம் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். அதுமட்டுமின்றி சமந்தா இப்படத்தில் இடம்பெற்ற ஐட்டம் சாங்கிற்கு கவர்ச்சி நடனம் ஆடி அசர வைத்தார்.
5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா, அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி இருந்தது. அதிலும் குறிப்பாக ஸ்ரீவள்ளி, ஊ சொல்றியா மாமா ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வைரல் ஹிட் அடித்தன.
இதையும் படியுங்கள்... என்ன மனுஷன் யா..! தீவிர ரசிகனுக்கு புற்றுநோய் பாதிப்பு... சைலண்டாக ரஜினி செய்து வந்த உதவி - நெகிழும் ரசிகர்கள்
பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து பிரம்மாண்ட வெற்றியை ருசித்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தை காட்டிலும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ‘புஷ்பா தி ரூல்’ என பெயரிட்டுள்ளனர்.
இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் வருகிற டிசம்பர் 14-ந் தேதி ரிலீசாக உள்ள அவதார் 2 படத்தோடு இணைத்து வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. படத்தை உலகளவில் ரீச் செய்வதற்காக புஷ்பா 2 படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... லவ் டுடே படம் பார்த்து சிம்பு அனுப்பிய ஸ்பெஷல் கிஃப்ட்... நெகிழ்ந்துபோன இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்