லவ் டுடே படம் பார்த்து சிம்பு அனுப்பிய ஸ்பெஷல் கிஃப்ட்... நெகிழ்ந்துபோன இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்
லவ் டுடே படம் பார்த்து போனில் அழைத்து பாராட்டியதுடன் இயக்குனர் பிரதீப்புக்கு பரிசு ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார் நடிகர் சிம்பு.
தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது லவ் டுடே படம் தான். பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள இப்படம் இந்த அளவுக்கு வரவேற்பை பெற்று வருவதற்கு காரணம், இப்படத்தின் கதை தான். காதலர்கள் இருவரு தங்களது போனை மாற்றிக்கொண்டால் என்ன நடக்கும் என்ற கதைக்களம் புதிதாக இருந்ததால் இளசுகள் மத்தியில் இப்படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
லவ் டுடே படம் வெறும் 5 கோடி பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டது. ஆனால் அப்படம் தற்போது 35 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி விட்டது. இப்படத்தை தமிழ் சினிமாவே கொண்டாடி வருகிறது. இப்படத்தை திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். நேற்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், லவ் டுடே படத்தை பார்த்து இயக்குனரை தனது வீட்டுக்கு அழைத்து பாராட்டினார்.
இதையும் படியுங்கள்... ‘லவ் டுடே’ படக்காட்சியை விழிப்புணர்வுக்காக பயன்படுத்திய போலீஸ்... நெகிழ்ந்துபோன இயக்குனர் பிரதீப்
இந்நிலையில், தற்போது நடிகர் சிம்பு, இயக்குனர் பிரதீப்புக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளதோடு, பூங்கொத்து ஒன்றை ஸ்பெஷல் கிஃப்ட்டாக அனுப்பி வைத்துள்ளார். அதில் அன்புள்ள பிரதீப், லவ் டுடே படத்தின் அமோக வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்றும் எழுதி அனுப்பி வைத்துள்ளார் சிம்பு.
சிம்பு அனுப்பி வைத்த பூங்கொத்தை வீடியோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதீப், சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, உங்களது ஆதரவும், உங்களது முதல் போன் காலும் எனக்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது. நன்றி சார் என பதிவிட்டுள்ளார். பிரதீப்பின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... லவ் டுடே படம் பார்த்து போனை மாத்திக்கலாமானு கேட்ட துர்கா ஸ்டாலின்! பதிலுக்கு முதல்வர் கொடுத்த அல்டிமேட் ரிப்ளை