என்ன மனுஷன் யா..! தீவிர ரசிகனுக்கு புற்றுநோய் பாதிப்பு... சைலண்டாக ரஜினி செய்து வந்த உதவி - நெகிழும் ரசிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தனது தீவிர ரசிகனுக்கு மிகப்பெரிய உதவியை செய்துவரும் தகவல் அறிந்து அவரை பாராட்டி வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். கர்நாடகாவில் சாதாரண பஸ் கண்டெக்டராக இருந்த இவர் இன்று இந்த அளவுக்கு உயர்ந்து தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகராக உள்ளதற்கு காரணம் தமிழ்நாட்டு மக்கள் தான். இதனால் தான் இவர் எங்கு சென்றாலும், எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், ‘என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களே’ என்பதை தவறாமல் சொல்லி விடுவார்.
சமீபத்தில் கூட கர்நாடகாவில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரஜினி, அங்குள்ள மக்கள் முன் கன்னட மொழியில் பேசியபோதும், இறுதியில் ‘என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களே’ என்று சொன்னது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. இவ்வாறு தமிழ் மக்கள் மீது ஈடு இணையில்லாத அன்பு வைத்திருக்கிறார் ரஜினி.
அதோடு இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ரஜினிகாந்த் நற்பணி மன்றம் என தொடங்கி பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி நற்பணி மன்றத்தின் தலைமை நிர்வாகியும், சூப்பர்ஸ்டாரின் நெருங்கிய நண்பருமான சுதாகர் என்பவர் டுவிட்டரில் ரஜினி பற்றி பரவும் போலி செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... தயாரிப்பாளர் சங்கத்தால் ‘வாரிசு’க்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்... பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்குகிறாரா விஜய்?
ரஜினியுடன் சுதாகர்
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது : “தலைவர் ரஜினிகாந்தின் அபரிமிதமான நன்மதிப்பைக் குலைப்பதற்காக இணையத்தில் ஒரு பொய்ப் பிரச்சாரம் உலா வருகிறது. இந்த இக்கட்டான காலங்களில் தலைவர் எனக்கு உதவவில்லை என்ற செய்தி முற்றிலும் போலியானது. உண்மையில் எனது சிறுநீரகப் புற்றுநோய் சிகிச்சைக்கான கடந்த ஒரு வருட மருத்துவச் செலவு முழுவதையும் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டவர் தலைவர்.
இப்போது வரை அவர் மட்டுமே நிதி மற்றும் தார்மீக ஆதரவை வழங்குகிறார், அதற்காக எங்கள் முழு குடும்பமும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். எனது சிகிச்சைக்கான நிதி சேகரிக்கும் பிரச்சாரத்தை எனது மகனின் நண்பர்கள் எனக்குத் தெரியாமல், அவர்களால் முடிந்த நிதியுதவியை வழங்குவதற்காக தொடங்கினார்கள். தலைவர் எங்களுக்கு உதவாததால் இது தொடங்கப்பட்டது என்ற செய்தி போலியானது. இது தலைவரின் நல்லெண்ணத்தையும் குணத்தையும் பாதித்துள்ளதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... திருமணத்திற்காக நயன்தாரா செஞ்ச விஷயத்தை அப்படியே காப்பி அடிக்கும் ஹன்சிகா... என்ன பண்ணபோகிறார் தெரியுமா?