வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் யங் லுக்கில் செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் அஜித்! வைரலாகும் போட்டோஸ்!
'வலிமை' (Valimai) பட ஷூட்டிங் ஸ்பாட்டில், தல அஜித் (Ajithkumar)... சக கலைஞர்களுடன் யங் லுக்கில் எடுத்து கொண்ட, சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதனை வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் தாறுமாறாக வைரலாக்கி வருகிறார்கள்.
ஒரு வருடத்திற்கு மேலாக, 'வலிமை' படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, 'வலிமை' படத்தில் இருந்து அடுத்தடுத்து சில புகைப்படங்கள் சமீப காலமாக வெளியாகி வருகிறது. .
ஏற்கனவே 'வலிமை' படத்தில் இருந்து சில BTS புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அஜித் செம்ம யங் லுக்கில், படக்குழுவினருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தல தொடர்ந்து தன்னுடைய படங்களில் படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றுவதையே விரும்பிய அஜித், 'வலிமை' படத்தில் ரசிகர்களை கவரும் விதமாக செம்ம ஸ்டைலிஷான யங் லுக்கில் நடித்துள்ளார் என்பது நாம் அறிந்தது தான்.
இவருடைய லுக் சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வீடியோவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் கார்திகேயவுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம், மற்றும் பைக் ரசர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களும் வெளியானது.
இதை தொடர்ந்து புதிய லுக்கில் அஜித், உணவுகள் எடுப்பது போன்று, ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில போட்டோஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.
தல அஜித் நடித்து முடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக ஹுமா குரேஷியுடன் நடித்துள்ளார். கார்த்திகேயா இளம் வில்லனாக மிரட்டியுள்ளார். இந்த தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக... வரும் பொங்கல் திருவிழாவிற்கு படம் வெளியாவதை படக்குழு உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.