பாக்ஸ் ஆபிஸில் தட்டித்தூக்கினாரா அஜித்?... துணிவு படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் இதோ
எச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகி உள்ள துணிவு திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 3-வது படம் துணிவு. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளன. போனி கபூர் தயாரித்துள்ள இப்படம் நேற்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இப்படத்தின் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து பக்கா மாஸ் படமாக இதனை எடுத்திருந்தார் இயக்குனர் எச்.வினோத். முதல் பாதி அஜித் ரசிகர்களைக் கவரும் வகையிலும், இரண்டாம் பாதி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கான படமாகவும் இருந்த துணிவு முதல் காட்சியில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வந்தது.
இதையும் படியுங்கள்... வசூலை வாரிக்குவித்ததா வாரிசு? - விஜய் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.26 கோடி வசூலித்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.19 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இனி அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
துணிவு படத்தில் அஜித்துடன் பிக்பாஸ் பிரபலம் ஜிபி முத்து, ஜான் கொகேன், பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், பிக்பாஸ் பாவனி, அமீர், சிபி சந்திரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனமும், வெளிநாடுகளில் லைகா நிறுவனமும் ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை சொன்னீங்க.. அப்படியானால் எல்லாமே செட்டிங்கா முதல்வரே? மநீம