சிறுத்தை சிவா படத்துக்காக ஒல்லியாகிவிட்டாரா அஜித்? வைரலாகும் ஸ்லிம் லுக் போட்டோஸ்
Ajith Slim Look Photos : நடிகர் அஜித்குமார் உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
Ajith Before and After Weight loss
தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். அவர் நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒரு படம் விடாமுயற்சி, மற்றொன்று குட் பேட் அக்லி. இதில் விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் வருகிற 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது.
Ajith Car Race
அதேபோல் அஜித் நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படமான குட் பேட் அக்லியின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த இரண்டு படங்களிலும் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிப்பது திரிஷா தான். குட் பேட் அக்லி படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமாரும், விடாமுயற்சி படத்துக்கு அனிருத்தும் இசையமைத்துள்ளனர். குட் பேட் அக்லி படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தை அடுத்த ஆண்டு மே மாதம் அஜித்தின் பிறந்தநாளுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
இதையும் படியுங்கள்... ரஜினிக்காக இளையராஜா விசிலடித்தே உருவாக்கிய எவர்கிரீன் ஹிட் பாடல் பற்றி தெரியுமா?
Ajith
விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை கங்குவா படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என கூறப்படுகிறது. கடந்த மாதம் வரை தொப்பையுடன் குண்டாக இருந்த நடிகர் அஜித் தற்போது ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.
Ajithkumar Slim Look Photos
ஸ்லிம் லுக்கில் செம்ம ஃபிட் ஆக இருக்கும் அவர் காதில் கடுக்கன் மாட்டிக் கொண்டு செம ஸ்டைலிஷாக இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அஜித் வருகிற ஜனவரி மாதம் துபாயில் நடைபெற இருக்கும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள உள்ளதால் அதற்காக அவர் தன் உடல் எடையை குறைத்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ.. அஜித்தை ஸ்லிம் லுக்கில் பார்த்த ரசிகர்கள் செம்ம ஹாப்பியாக உள்ளனர்.
இதையும் படியுங்கள்... கன்டன்டே கொடுக்காம எலிமினேட் ஆன ஷிவகுமாருக்கு பிக் பாஸ் கொடுத்த சம்பளம் இவ்வளவா?