கன்டன்டே கொடுக்காம எலிமினேட் ஆன ஷிவகுமாருக்கு பிக் பாஸ் கொடுத்த சம்பளம் இவ்வளவா?
Bigg Boss Shivakumar Salary : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆகி இருக்கும் ஷிவகுமாருக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் பற்றி பார்க்கலாம்.
Shivakumar
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் தற்போது 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் நான்காம் வார இறுதியில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் எண்ட்ரி கொடுத்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி வார வாரம் ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆவது வழக்கம். அந்த வகையில் இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி ஆகிய 6 பேர் இதுவரை எலிமினேட் ஆகினர்.
Bigg Boss Tamil season 8
ஆண்கள் - பெண்கள் என இரு அணிகளாக இருந்த பிக்பாஸ் வீடு கடந்த வாரம் முதல் ஒரே அணியாக மாறியது. வீட்டின் நடுவே இருந்த கோடும் நீக்கப்பட்டு, வழக்கமான நிலைக்கு திரும்பியது பிக்பாஸ். கோட்டை எடுத்த கையோடு, பொம்மை டாஸ்க் கொடுத்ததால் கடந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடே கலவர பூமியாக மாறியது. அடிதடி சண்டை என பரபரப்பு நிரம்பிய வாரமாக கடந்த வாரம் அமைந்தது. இந்த பொம்மை டாஸ்கில் ஜெஃப்ரி வெற்றி பெற்றார்.
இதையும் படியுங்கள்... வந்த சுவடு தெரியாமல் கிளம்பிட்டாரா? பிக் பாஸ் தமிழ் சீசன் 8 - இந்த வார எலிமினேஷன் யார்?
Wildcard Contestants
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 10 போட்டியாளர்கள் நாமினேட் ஆகி இருந்த நிலையில், அதில் மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் சாச்சனா கம்மியான வாக்குகளை பெற்றிருந்ததால் அவர் எலிமினேட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் ட்விஸ்டாக ஷிவக்குமாரை இந்த வாரம் எலிமினேட் செய்து வீட்டுக்கு அனுப்பினர்.
BB Eviction
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் இருந்து எந்த ஒரு கன்டென்டும் கொடுக்காமல் அமைதிப் புறாவாக இருந்து வந்தார் ஷிவக்குமார். கடந்த வாரமே எலிமினேட் ஆக வேண்டிய இவர், நாமினேஷன் ஃப்ரீ பாஸ் பெற்று தப்பித்ததார். ஆனால் இந்த வாரமும் அவர் ஆட்டத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.
Shivakumar Salary
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்ட ஷிவக்குமார். 28 நாட்களில் இந்த நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் ஆகி இருக்கிறார். அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டது. அதன்படி அவர் தங்கி இருந்த 28 நாட்களுக்கு மொத்தமாக அவருக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஐயப்பன் பாடல் சர்ச்சை; இசைவாணிக்கு எதிராக கொதித்த எம்.எஸ்.பாஸ்கர்!