அஜித்துக்கு என்ன ஆச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏகே!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், தற்போது சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Ajithkumar Admitted in Hospital : தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருகிறார் அஜித்குமார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனது. அதில் விடாமுயற்சி திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து குட் பேட் அக்லி திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆனது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்தது. அஜித்தின் கெரியரில் அதிக வசூல் செய்த படமாக குட் பேட் அக்லி மாறி உள்ளது.
அஜித்துக்கு பத்ம பூஷன் விருது
பத்ம பூஷன் விருது வாங்கிய அஜித்
இதனிடையே இவருக்கு கடந்த ஜனவரி மாதம் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 28-ந் தேதி மாலை டெல்லியில் நடைபெற்ற விழாவில் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இதற்காக குடும்பத்துடன் டெல்லிக்கு சென்றிருந்த நடிகர் அஜித்குமார் நேற்று சென்னைக்கு திரும்பினார். விமான நிலையத்தில் அஜித்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விரைவில் மீடியாவை சந்திப்பேன் என்றும் கூறிவிட்டு சென்றார் அஜித்.
அஜித், ஷாலினி
அஜித் மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், சென்னை திரும்பிய கையோடு இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் அஜித். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் உடல்நல பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது நார்மல் செக் அப் தான் என்றும், மற்றபடி எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என கூறப்படுகிறது. நேற்று சென்னை விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கியபோது அவருக்கு காலில் லேசாக காயம் ஏற்பட்டதால் அதற்காக பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறதாம்.