அஜித் மனைவி ஷாலினி பாடிய ஒரே ஒரு பாட்டு; பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான கதை தெரியுமா?
Shalini Ajith Singing Song : நடிகர் அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி சினிமாவில் ஒரே ஒரு பாடல் பாடி இருக்கிறார். அந்தப் பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது.
Shalini Ajithkumar
குழந்தை நட்சத்திரமாக தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ள ஷாலினி, அனியாதிபிராவு என்கிற மலையாள படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படம் தான் தமிழில் காதலுக்கு மரியாதை என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஷாலினி தான் நடித்திருந்தார். முதல் படமே ஹிட்டானதை அடுத்து ஷாலினிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதனால் மலையாளத்தில் தொடர்ந்து 5 படங்களில் கமிட் ஆனார் ஷாலினி.
Amarkalam
அந்த 5 படங்களை முடித்த கையோடு தமிழில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக அமர்க்களம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் ஷாலினி. அப்படத்தை சரண் இயக்கி இருந்தார். 1999-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படம் தான் ஷாலினியின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஏனெனில் இப்படத்தில் நடிக்கும் போது தான் அஜித், ஷாலினி இடையே காதல் ஏற்பட்டது. இப்படம் ரிலீஸ் ஆன அடுத்த ஆண்டே இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இதையும் படியுங்கள்... பாட்டே இல்லாமல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான படங்கள் இத்தனையா?
Shalini, Ajith
நடிகை ஷாலினி தமிழில் கண்ணுக்குள் நிலவு, அலைப்பாயுதே, பிரியாத வரம் வேண்டும், அமர்க்களம், காதலுக்கு மரியாதை என மொத்தமே 5 படங்களில் தான் ஹீரோயினாக நடித்தார். அதன்பின்னர் சினிமாவை விட்டு விலகிய ஷாலினி மீண்டும் நடிக்க வரவே இல்லை. இருப்பினும் அவர் நடித்த படங்கள் அனைத்துமே காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகின்றன. இவர் நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
Shalini Singing Song
நடிகை ஷாலினி தமிழில் ஒரே ஒரு பாடலை பாடி இருக்கிறார். அப்பாடலும் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அப்பாடல் மூலம் தான் அஜித்துகு ஷாலினி மீது ஒரு ஈர்ப்பே வந்ததாம். அது வேறு எதுவுமில்லை... அமர்க்களம் படத்தில் இடம்பெற்ற ‘சொந்தக் குரலில் பாட’ என்கிற பாடல் தான். அப்பாடலை தன்னுடைய இனிமையான குரலில் பாடிய ஷாலினி அப்பாடல் ஹிட் ஆன பின்னர் எந்த படத்திலும் பாடவில்லை. தான் முதன்முதலில் பாடும் பாடல் என்பதற்கு ஏற்ப அப்பாடல் சிச்சுவேஷனும் அமைந்திருக்கும். சொந்தக் குரலில் பாட ரொம்ப நாளா ஆசை என்கிற வரிகள் ஷாலினிக்காகவே எழுதப்பட்டது. மேலும் அப்பாடலில் சுசிலா, ஜானகி போன்ற பாடகிகளிடமும் மன்னிப்பு கேட்டிருப்பார் ஷாலினி.
இதையும் படியுங்கள்... யுவன் 8 வயசுல போட்ட டியூன், அப்படியே காப்பி அடிச்சு யூஸ் பண்ணிக்கிட்ட இளையராஜா - எந்த பாட்டுக்கு தெரியுமா?