MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 3 பாடல்களை தொக்கா தூக்கிய ஆதிக்! இழப்பீடு கேட்டு இளையராஜா அனுப்பிய நோட்டீஸால் பரபரப்பு!

3 பாடல்களை தொக்கா தூக்கிய ஆதிக்! இழப்பீடு கேட்டு இளையராஜா அனுப்பிய நோட்டீஸால் பரபரப்பு!

'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் அனுமதி இன்றி தன்னுடைய 3 பாடல்களை பயன்படுத்தியதற்காக தற்போது இளையராஜா மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Apr 15 2025, 02:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த குட் பேட் அக்லி:

அஜித் ரசிகர்களின், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீசான திரைப்படம் 'குட் பேட் அக்லி'. விடாமுயற்சி ரசிகர்களை ஏமாற்றிய நிலையில், ஆதிக் ரவிச்சந்திரனின் 'குட் பேட் அக்லி' ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில்... அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும் ஃபுல் டைம் எண்டெர்டெயின்மெண்ட் படமாக தற்போது 'குட் பேட் அக்லி' வெளியாகி திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

25
2 Million Ticket Sold

2 Million Ticket Sold

இரண்டு மில்லியன் டிக்கெட் விற்பனை:

நான்கே நாட்களில் அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தின் லைஃப் டைம் வசூலை முறியடித்த 'குட் பேட் அக்லி' தற்போது வரை இரண்டு மில்லியன் டிக்கெட் விற்பனையாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் வாட்ஸ்-ஆப் டிபி என்ன தெரியுமா? பிரியா பிரகாஷ் வாரியர் உடைத்த ரகசியம்!
 

35
Good Bad Ugly Box office Collection:

Good Bad Ugly Box office Collection:

 குட் பேட் அக்லி வசூல்:

மேலும் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக படம் ஓடிக் கொண்டிருப்பதால், இப்படத்தின் வசூல் இன்னும் சில நாட்களில் ரூ. 200 கோடியை எட்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். பல வருடத்திற்கு பின்னர், அஜித்துக்கு சூப்பர் ஹிட் வெற்றியை குட் பேட் அக்லி கொடுத்துள்ள நிலையில், இந்த படத்தில் சுமார் 9 பழைய பாடல்களை மீண்டும் பயன்படுத்தி இருந்தார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.

 

45
Ilaiyaraaja Songs used in Good bad ugly:

Ilaiyaraaja Songs used in Good bad ugly:

ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்:

குறிப்பாக இளையராஜா இசையில் வெளியான, "என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ, ஒத்த ரூபா தாரேன், போன்ற பாடல்களும் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் தன்னுடைய அனுமதி இன்றி குட் பேட்லி படத்தில், தன்னுடைய பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக கூறி படக்குழுவினருக்கு இளையராஜா ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விடாமுயற்சி லைஃப் டைம் வசூல் சாதனையை 4 நாளில் சல்லி சல்லியாய் நொறுக்கிய குட் பேட் அக்லி!

55
Ilaiyaraaja Demanding:

Ilaiyaraaja Demanding:

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்:

மேலும் இந்த நோட்டீஸில் மூன்று பாடல்களையும், படத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும், ஏழு நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லை என்றால் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்படும் என்று இளையராஜா தரப்பில் இருந்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே இந்த நோட்டீஸ் தொடர்பாக படக்குழு என்ன முடிவெடுக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
இளையராஜா
குட் பேட் அக்லீ
தமிழ் சினிமா
அஜித் குமார்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved