அஜித்தின் வாட்ஸ்-ஆப் டிபி என்ன தெரியுமா? பிரியா பிரகாஷ் வாரியர் உடைத்த ரகசியம்!
நடிகர் அஜித் நடிப்பில், ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம், தற்போது திரையரங்குகளில் பட்டையை கிளப்பி வரும் நிலையில், அஜித்தின் WhatsApp டிபி குறித்து பேசி உள்ளார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.

மலையாள படத்தில் அறிமுகம்:
மலையாள திரையுலகை சேர்ந்தவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். 25 வயதே ஆகும் இவர் பி.காம் முடித்த கையேடு சினிமா மீது இருந்த ஈர்ப்பு காரணமாக, திரையுலகில் கவனம் செலுத்த துவங்கினார். அதன்படி 2018 ஆம் ஆண்டு, வெளியான 'தானாக' என்கிற மலையாள படத்தில் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Oru Adaar Love Movie:
ஒரு அடர் லவ்:
இதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு, 'ஒரு அடர் லவ்' திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படத்தில் இவருடைய கண்ணடிக்கும் காட்சி பிரியா பிரகாஷ் வாரியரை ஒரே நாளில் பிரபலமாக்கியது. பின்னர் தெலுங்கின் பக்கம் சாய்ந்த இவருக்கு... 'செக்', 'இஷ்க் நாட் எ லவ் ஸ்டோரி' ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அன்று கண்ணழகி; இன்று இடுப்பழகி! பிரியா வாரியரை மீண்டும் டிரெண்டாக்கிய குட் பேட் அக்லி!
Priya Prakash Varrier Tamil movies:
போராடி வரும் பிரியா வாரியர்:
தற்போது வரை நிலையான ஹீரோயின் என்கிற இடத்தை பிடிக்க தொடர்ந்து போராடி வரும் பிரியா வாரியர், இந்த ஆண்டு தமிழ் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். அதன்படி தனுஷ் இயக்கத்தில், 3-ஆவது படமாக உருவான 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில், ப்ரீத்தி என்கிற பிரியா பிரகாஷ் வாரியர் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு இவருக்கு வெற்றியை தரவில்லை என்றாலும், 'குட் பேட் அக்லி' மீண்டும் பிரியா வாரியரை பிரபலமடைய வைத்துள்ளது.
Arjun Das Lover:
அர்ஜுன் தாஸுக்கு காதலி:
அர்ஜுன் தாஸுக்கு காதலியாக பிரியா வாரியர் நடித்திருந்ததோடு, இந்த படத்தில் இடம்பெற்ற தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு இவர் ஆட்டம் போட்டது இவரை மீண்டும் சோசியல் மீடியாவில் வைரலாக்கி உள்ளது. அடுத்ததாக ஹிந்தியிலும் 2 படங்களில் வருகிறார்.
Ajith Whatsapp DP
அஜித்தின் வாட்ஸ் ஆப் டிபி:
இந்நிலையில் குட் பேட் அக்லி படம் பற்றியும் தல அஜித் பற்றியும் பிரியா வாரியர் கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அஜித் தற்போது பிரான்சில் தன்னுடைய கார் ரேஸில் கவனம் செலுத்தி வருவதாக கூறினார். பின்னர் தொகுப்பாளர் உங்களிடம் அஜித் சாரின் நம்பர் இருக்கிறதா? என கேட்டதற்கு ஆமாம் வைத்திருக்கிறேன் எனக் கூறினார். பின்னர் அஜித் சாரின் வாட்ஸ் ஆப் டிபி பற்றி சொல்ல முடியுமா? என கேட்டதற்கு அஜித் தன்னுடைய கார் ரேஸிங் புகைப்படத்தை தான் டிபியாக வைத்துள்ளார். என கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.