- Home
- Cinema
- AK 61 Update : ஏ.கே.61 படத்துக்காக அஜித் எடுக்க உள்ள மிகப்பெரிய ரிஸ்க்.... ‘வலிமை’ நாயகனுக்கு இது செட் ஆகுமா?
AK 61 Update : ஏ.கே.61 படத்துக்காக அஜித் எடுக்க உள்ள மிகப்பெரிய ரிஸ்க்.... ‘வலிமை’ நாயகனுக்கு இது செட் ஆகுமா?
AK 61 Update : அஜித் நடிக்கும் ஏ.கே.61 படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித், ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார்.

சக்ஸஸ் ஆன சதுரங்க வேட்டை
இயக்குனர்கள் பார்த்திபன், விஜய் மில்டன் ஆகியோரிடம் அசிஸ்டண்ட் டைரக்டராக பணியாற்றிவர் எச்.வினோத். இவர் கடந்த 2014-ம் ஆண்டு நட்டி நடிப்பில் வெளியான சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சுவாரஸ்யமான கதைக்களத்துடன் உருவாகி இருந்த இப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது.
ஹிட் அடித்த தீரன்
முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த எச்.வினோத், அடுத்ததாக கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கினார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கும் சான்ஸையும் பெற்றுத்தந்தது.
அஜித்துடன் கூட்டணி
நேர்கொண்ட பார்வை திரைப்படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். இது ஒரு ரீமேக் படமாக இருந்தாலும் அதனை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு மாற்றி வெற்றிகண்டார் எச்.வினோத். இப்படத்தில் எச்.வினோத்தின் திறமையை பார்த்து வியந்துபோன நடிகர் அஜித், தனது அடுத்தபடமான ‘வலிமை’ படத்தை இயக்கும் வாய்ப்பையும் வழங்கினார்.
வலிமை ரூ.200 கோடி வசூல்
எச்.வினோத் - அஜித் கூட்டணியில் தயாரான வலிமை படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. அதிரடி ஆக்ஷன் கதையம்சத்துடன் வெளியான இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. இப்படம் ரூ,200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
ஏ.கே.61 அப்டேட்
இதையடுத்து அஜித் நடிக்கும் ஏ.கே.61 படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித், ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இப்படம் மணி ஹெய்ஸ்ட் வெப் தொடர் பாணியில் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து தயாராக உள்ளது. சமீபத்திய தகவல்படி இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஆக்ஷன் காட்சிகளே இருக்காது என கூறப்படுகிறது. ஆக்ஷனுக்கு பெயர்போன அஜித்துக்கு ஆக்ஷன் காட்சிகளே இல்லை என்றால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?... அஜித் எடுக்கும் இந்த ரிஸ்க் அவருக்கு செட் ஆகுமா? என பல்வேறு கேள்விகள் எழத்தொடங்கி உள்ளன.
இதையும் படியுங்கள்... Irfan's view யூடியூப் சேனலுக்கு என்னாச்சு... திடீரென முடக்கப்பட்டது ஏன்? - இர்பான் விளக்கம்