Irfan's view யூடியூப் சேனலுக்கு என்னாச்சு... திடீரென முடக்கப்பட்டது ஏன்? - இர்பான் விளக்கம்

Irfan's view :  Irfan's view என்கிற யூடியூப் சேனலை கடந்த 6 வருடங்களுக்கு மேலாக நிர்வகித்து வருகிறார் முகமது இர்பான். அதில் இதுவரை 1500-க்கும் மேற்பட்ட வீடியோக்களை அவர் பதிவிட்டுள்ளார்.

Reason behind Irfans view youtube channel terminated

Irfan's view யூடியூப் சேனல்

யூடியூப் எனும் சமூக வலைதளம் கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமானது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக மாறி உள்ளது யூடியூப். இதனால் இதில் சேனல் ஆரம்பிப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக கொரோனா ஊரடங்குக்கு பின் தமிழகத்தில் யூடியூப்பர்களின் எண்ணிக்கை மிகவேகமாக அதிகரித்துள்ளது.

லட்சக்கணக்கான யூடியூப் சேனல்கள் இருந்தாலும், அதன்மூலம் ஒருசிலர் மட்டுமே பிரபலமடைகின்றனர். அந்த வகையில், யூடியூப்பில் உணவு ரிவ்யூ செய்வதன் மூலம் பாப்புலர் ஆனவர் முகமது இர்பான். இவர் Irfan's view என்கிற யூடியூப் சேனலை கடந்த 6 வருடங்களுக்கு மேலாக நிர்வகித்து வருகிறார். அதில் இதுவரை 1500-க்கும் மேற்பட்ட வீடியோக்களை அவர் பதிவிட்டுள்ளார்.

Reason behind Irfans view youtube channel terminated

முடக்கப்பட்டது ஏன்?

Irfan's view யூடியூப் சேனலை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வந்தனர். அவர்களை கவரும் விதமாக தினந்தோறும் வீடியோ பதிவிட்டு வந்தா இர்பான். இந்நிலையில், நேற்று Irfan's view யூடியூப் சேனல் திடீரென முடக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், இர்பானிடம் அதற்கான காரணத்தை கேட்டு வந்தனர்.

இதையடுத்து இதுகுறித்து விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்ட இர்பான், அதில் கூறியதாவது: “விதிமுறைகளை மீறியதால் எனது சேனல் முடக்கப்பட்டு உள்ளதாக யூடியூப் நிர்வாகம் எனக்கு மெயில் அனுப்பி உள்ளது. ஆனால் என்ன பிரச்சனை என்று இதுவரை சரிவர தெரியவில்லை. இனி அந்த சேனல் மீண்டும் கிடைக்குமா அல்லது வேறு சேனல் தான் தொடங்கனுமா என்பது விரைவில் தெரிய வரும். பழைய சேனலை மீட்டுவிடலாம் என பலரும் கூறுகின்றனர். அது சற்று ஆறுதலாக இருக்கிறது” என இர்பான் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... Sivakarthikeyan new movie : சிவகார்த்திகேயனின் அடுத்த டார்கெட் சமந்தா.... மீண்டும் இணையும் சீமராஜா கூட்டணி..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios