டீன் ஏஜ்ஜை கடந்தாச்சு! 20-ஆவது பிறந்தநாளை செம்ம Vibe உடன் கொண்டாடிய அனிகா சுரேந்திரன்!
நடிகை அனிகா சுரேந்திரன் தன்னுடைய 20-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Anikha surendran Birthday
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஹீரோயின் அவதாரம் எடுத்துள்ள அனிகா சுரேந்திரன் தன்னுடைய 20-ஆவது பிறந்தநாளை செம வைப்புடன், மிகவும் எளிமையாக கொண்டாடி உள்ள புகைப்படங்கள் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அணிகா சுரேந்திரனை, தமிழில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். அஜித்தை வைத்து தான் இயக்கிய 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்தின் மகளாக அனிகாவை நடிக்க வைத்தார். மேலும் தன்னுடைய முதல் படத்திலேயே தன்னுடைய கியூட் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.
Anikha surendran 20th Birthday
திரிஷா - அஜித்துக்கு இடையே இருந்த கெமிஸ்ட்ரியை விட, அஜித் அனிகா இடையே இருந்த அப்பா - மகள் கெமிஸ்ட்ரி தான் அதிகம் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் அஜித்துக்கு மகளாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான, 'விஸ்வாசம்' படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் அனிகாவின் அம்மாவாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார்.
இந்த படம் வெளியானதில் இருந்தே பலரும் அனிகாவை நடிகை நயன்தாராவுடன் ஒப்பிட்டு பேச துவங்கினர். அனிகா பார்ப்பதற்கு நயன்தாரா போலவே இருப்பதாக பலர் கூறுவது உண்டு. மேலும் நயன்தாராவின் ஃபேவரட் திரைப்படமான, நானும் ரவுடிதான் படத்திலும் நயன்தாராவின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Anikha surendran Photos
மேலும் ஜெயம் ரவியுடன் மிருதன், விஜய் சேதுபதியுடன் மாமனிதன், என அடுத்தடுத்து பல படங்களில் பிஸியானார். 18 வயதை எட்டியதும் ஹீரோயின் வாய்ப்புக்கு அடிப்படை துவங்கிய அனிகா சுரேந்திரன், தெலுங்கில் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்த வெளியான 'புட்ட பொம்மா' படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதன் பின்னர் மலையாளத்தில் 'ஓ மை டார்லிங்' என்கிற திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்தார். இதில் லிப்லாக் காட்சியில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர வைத்தார்.
Anikha surendran Movies
அனிகாவை குழந்தை நட்சத்திரமாகவே பார்த்த ரசிகர்களால் இவருடைய இந்த மாற்றத்தை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே நடிப்பை அதிக அளவில் ட்ரோல் செய்து, விமர்சிக்க தொடங்கினர், பின்னர் இதற்கான விளக்கத்தையும் கொடுத்திருந்தார். கடைசியாக ஹிப் ஹாப் ஆதி, ஹீரோவாக நடித்த 'பிடி சார்' திரைப்படத்தில் மிகவும் போல்டான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்திருந்தார்.
தற்போது நடிகர் தனுஷ் தன்னுடைய அக்கா மகனை ஹீரோவாக வைத்து எடுத்துள்ள 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.
15 நாளில் ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்ட 'கங்குவா'! வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு!
Ajith Reel Daughter Anikha
ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் அனிகா சுரேந்திரன், நேற்று தன்னுடைய 20-ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி உள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும் டீன் ஏஜ் வயதை கடந்து தற்போது தன்னுடைய இருபதாவது வயதில் அனிகா அடி எடுத்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.