தமிழகத்தில் மட்டும் 100 கோடியை அள்ளிய 'குட் பேட் அக்லி'! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
அஜித் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன 'குட் பேட் அக்லி' திரைப்படம் தற்போது தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக, விநியோகஸ்தர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குட் பேட் அக்ல:
'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் மூலம் ரூ.100 கோடி வசூல் படத்தை கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், முதல் முறையாக அஜித்தை வைத்து இயக்கிய திரைப்படம் தான் 'குட் பேட் அக்லி'. இந்த படத்தில் கதை - லாஜிக்கை
என்பதை தாண்டி அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களும் இடம் பெற்றிருந்தது. இந்த திரைப்படம் தல ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆனது.
தமிழகத்தில் கோடி கோடியாய் வசூல்; மத்த ஸ்டேட்டுல குட் பேட் அக்லீ தோல்வியா?
Good Bad Ugly Tamil Nadu Collection
தமிழகத்தில் மட்டும் 'குட் பேட் அக்லி' ரூ.100 கோடி வசூல்:
முதல் நாளே இந்த படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்த நிலையில், இப்படம் உலக அளவில் ரூ.200 கோடியை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் மட்டும் 'குட் பேட் அக்லி' ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளதாக, இந்த படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களையும் உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அதை போல் பட குழுவினரும் உற்சாகத்தில் உள்ளனர்.
Ajith Advice
அஜித் அட்வைஸ்:
ஆதிக் ரவிச்சந்திரனிடம் படத்தின் வெற்றி குறித்து பேசிய நடிகர் அஜித், "இந்த வெற்றியை தலையில் ஏற்றுக் கொள்ளாமல் அடுத்த படத்தில் கவனம் செலுத்துமாறு அட்வைஸ் செய்ததாக" ஆதிக் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறிஇருந்தார் . மேலும் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள நிலையில், அதற்கான பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது கார் ரேஸுக்காக பாரிஸில் உள்ள அஜித் சென்னை திரும்பியதும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள தன்னுடைய அடுத்த படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்தின் வாட்ஸ்-ஆப் டிபி என்ன தெரியுமா? பிரியா பிரகாஷ் வாரியர் உடைத்த ரகசியம்!
Action Entertainer Movie:
முழுக்க முழுக்க ஆக்ஷன் எண்டெர்டெயினராக இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன்:
அஜித்தை வைத்து இயக்கிய 'குட் பேட் அக்லி' படத்தை முழுக்க முழுக்க ஆக்ஷன் எண்டெர்டெயினராக இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், தன்னுடைய அடுத்த படத்தை எப்படிப்பட்ட கதைக்களத்தில் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மேலும் தமிழகத்தை தவிர ஆந்திரா - கேரளா போன்ற மாவட்டங்களில் குட் பேட் அக்லி எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
Good Bad Ugly Story:
குட் பேட் அக்லி கதைக்களம்:
அதே நேரம், நீண்ட இடைவெளிக்கு பின்னர் அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ள இப்படம், ரூ.300 கோடி வசூலை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா, சுனில், பிரியா வாரியர், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தன்னுடைய குடும்பத்திற்காகாவும், குழந்தைகளுக்காகவும் கேங்ஸ்டர் ஆக இருந்த அஜித் நல்லவராக திருந்தி வெளிநாட்டில் வாழ்ந்து வரும் நிலையில்... தன்னுடைய மகனுக்காக மீண்டும் எப்படி கேங் ஸ்டாராக மாறுகிறார்? மகன் மீது போடப்பட்ட கொலை பழியை நீக்கி அவன் நிரபராதி என்று நிரூபிக்க போராடுகிறார் என்பதே இந்த படத்தின் கதைக்களம் ஆகும்.
விடாமுயற்சி லைஃப் டைம் வசூல் சாதனையை 4 நாளில் சல்லி சல்லியாய் நொறுக்கிய குட் பேட் அக்லி!