தமிழகத்தில் கோடி கோடியாய் வசூல்; மத்த ஸ்டேட்டுல குட் பேட் அக்லீ தோல்வியா?
Good Bad Ugly Box Office Collection : அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லீ படம் தமிழகத்தில் கோடி கோடியாய் வசூல் குவித்து சாதனை படைத்து வரும் நிலையில் மற்ற மாநிலங்களில் தோல்வியை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

விடாமுயற்சி
Good Bad Ugly Box Office Collection : அஜித்தின் தீவிர ரசிகரான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய ஹீரோவை எப்படியெல்லாம் பார்த்து ரசிக்க ஆசைப்பட்டாரோ அப்படியே காட்டி எல்லோரையும் ரசிக்க வைத்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த விடாமுயற்சி கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில் வசூலிலும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.
அதற்கெல்லாம் பதில் கொடுக்கும் வகையில் கடந்த 10 ஆம் தேதி வெளியான குட் பேட் அக்லீ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. ஆக்ஷன் காட்சிகள் கொண்ட இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்துள்ளார்.

மேலும், சுனில், சிம்ரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், பிரசன்னா, பிரபு ஆகியோர் பலர் நடித்திருந்தனர். தனது ஹீரோவை எப்படியெல்லாம் பார்க்க ஆசைப்பட்டாரோ அதே போன்று குட் பேட் அக்லீ படத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் காட்டியிருக்கிறார். இந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே டீசர், டிரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
குட் பேட் அக்லீ முதல் நால் வசூல்:
அதே போன்று தான் படமும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது. ஆனால், ஃபேமிலி ஆடியன்ஷை கவரவில்லை என்று விமர்சனம் எழுந்த நிலையில் படத்தில் எல்லா வகையான வெரைட்டியும் இருப்பதாக அடுத்தடுத்த நாட்களில் விமர்சனம் வரவே படம் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. குட் பேட் அக்லீ வெளியான முதல் நாளில் தமிழகத்தில் ரூ.30 கோடி வசூல் குவித்தது.

டிராகன் சாதனை முறியடிப்பு:
படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.170 கோடி வரையில் வசூல் குவித்திருக்கிறது. இது டிராகன் படத்தின் வசூலை விட அதிகம். டிராகன் வெளியாகி 5 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.152 கோடி வசூல் குவித்திருக்கிறது. அந்த சாதனையை குட் பேட் அக்லீ முறியடித்துள்ளது.
ரூ.200 கோடி எட்டும்:
மேலும் அடுத்தடுத்த மாணவர்களுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறை தொடங்க உள்ள நிலையில் குட் பேட் அக்லீ படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார இறுதிக்குள்ளாக குட் பேட் அக்லீ ரூ.200 கோடியை எட்டும் என்று கூறப்படுகிறது.

வலைப்பேச்சு பிஸ்மியின் குட் பேட் அக்லீ வசூல் கருத்து:
இந்த நிலையில் தான் வலைப்பேச்சு பிஸ்மி குட் பேட் அக்லீ படத்தின் வசூல் குறித்து முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் மட்டும் இந்தப் படம் அதிக வசூல் குவித்திருக்கிறது. தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் போதுமான அளவில் வசூல் பெறவில்லை. அதே நேரத்தில் வட மாநிலங்களிலும் எதிர்பார்த்த வெற்றி குட் பேட் அக்லீ படத்திற்கு கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார். குட் பேட் அக்லீ படத்தின் தமிழக வசூல் 5 நாட்களில் ரூ.100 கோடி என்று சொல்லப்படுகிறது.