ஏர்போர்ட்டில் ரசிகர்கள் ஆசை நிறைவேற்றிய அஜித்... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
அஜித் தன்னுடைய படப்பிடிப்பு பணிக்காக இன்று விசாகப்பட்டினம் செல்ல ஏர்போர்ட் வந்த போது, இவருடன் புகைப்படம் எடுக்க ஆசை பட்ட ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் மூன்றாவது முறையாக, இயக்குனர் எச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் தன்னுடைய 61-ஆவது படத்தை நடித்து வருகிறார். இந்த படத்தின் 30 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சென்றுள்ளது.
இதுகுறித்து ஏற்கனவே வெளியான தகவலில், இன்று முதல் விசாகப்பட்டினத்தில் நடக்கும் படப்பிடிப்பில் நடிகை மஞ்சு வாரியர் கலந்து கொள்ளும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து இன்று நடிகர் அஜித்தும், விசாகப்பட்டினம் சென்றுள்ளார்.
மேலும் செய்திகள்: நயனை கட்டிப்பிடித்து நச்சுனு முத்தம் கொடுத்த விக்கி..! வைரலாகும் படு ரொமான்டிக் ஹாட் போட்டோ..!
சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் செல்வதற்காக, ஏர்போர்ட் வந்த போது... ஏர்போர்ட் பஸ்சில் மக்களோடு மக்களாக, இவர் பயணம் செய்த வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அஜித்துடன் சில ஏர்போர்ட் ஊழியர்கள், புகைப்படம் எடுத்து கொள்ள ஆசைப்பட்ட நிலையில், அஜித் அவர்களது ஆசையை நிறைவேற்றும் விதமாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகள்: வெள்ளை நிற டீ-ஷர்ட்டில்... வெக்க புன்னகையோடு விதவிதமாக போஸ் கொடுத்த பிரியங்கா மோகன்! கியூட் போட்டோஸ்!
பொதுவாக பல பிரபலங்கள், ஏர்போர்ட்... மற்றும் பொது இடங்களுக்கு வந்தால், முகத்தில் முகமூடி போட்டு தங்களின் அடையாளத்தை மறைத்து கொண்டு, ரசிகர்கள் புகைப்படம் எடுக்க வந்தாலும் அதை தவிர்த்துவிடும் நிலையில், அஜித்தின் எளிமையும், ரசிகர்களுக்கு அவர் கொடுக்கும் மரியாதையும் தான் இவர்களை இந்த உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும், AK 61 -ஆவது படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.