வலிமை ரிலீசாகி ஓராண்டு நிறைவு... அஜித் படத்தை அதகளமாக கொண்டாடும் ரசிகர்கள்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ஆக்ஷன் திரைப்படமான வலிமை ரிலீசாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு எப்பவுமே மறக்க முடியாத படமாக அமைந்தது. ஏனெனில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியதில் இருந்து ரிலீஸ் வரை அப்டேட் கேட்டு அவர்கள் செய்த அட்ராசிட்டியை யாராலும் மறக்க முடியாது. குறிப்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலியிடம் வலிமை அப்டேட் கேட்டது. பிரச்சாரத்திற்கு சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அப்டேட் கேட்டதெல்லாம் வேறலெவலில் டிரெண்ட் ஆகின.
இப்படி அப்டேட்டுக்காக பல மாதங்கள் காத்துக் கிடந்த ரசிகர்களுக்கு இறுதியில் அடுக்கடுக்கான அப்டேட்டுகளை வெளியிட்ட படக்குழு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி வலிமை படத்தை ரிலீஸ் செய்தது. முதலில் இப்படத்தை பொங்கலுக்கு தான் ரிலீஸ் செய்வதாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று அதிகம் பரவி வந்ததால், ரிலீஸ் தேதியை பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைத்தனர். கடந்தாண்டு ரிலீசான முதல் பெரிய பட்ஜெட் படம் வலிமை தான்.
இதையும் படியுங்கள்... லியோவுக்கு போட்டியாக ஆங்கிலத்தில் தலைப்பு வைத்த அஜித்... லீக்கானது ஏகே 62 படத்தின் டைட்டில்?
வலிமை படம் சிங்கிளாக ரிலீஸ் ஆனதால், இப்படத்தை கிட்டத்தட்ட தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்தனர். இதனால் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல்நாளில் ரூ.36 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. வலிமை திரைப்படம் வசூலை வாரிக்குவித்தாலும், விமர்சன ரீதியாக இப்படம் சறுக்கலை தான் சந்தித்தது. வலிமை படத்தின் பலமாக பார்க்கப்பட்ட ஆக்ஷன் மற்றும் பைக் ஸ்டண்ட் காட்சிகளே அப்படத்திற்கு பின்னடைவாகவும் அமைந்தது.
இப்படி வலிமை படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாவிட்டாலும் இப்படம் வசூல் ரீதியாக ஒரு வெற்றிப்படமாகவே அமைந்தது. இப்படம் உலகளவில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்ததாக அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இப்படி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த வலிமை படம் ரிலீசாகி இன்றுடன் ஓராண்டு ஆகிறது. இதனை அஜித் ரசிகர்கள் தடபுடலாக கொண்டாடி வருகின்றனர். சில இடங்களில் வலிமை படம் இன்று ரீ-ரிலீஸும் செய்யப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்... நயன்தாராவுக்கு என்ன ஆச்சு... சினிமாவை விட்டு விலகும் முடிவில் லேடி சூப்பர்ஸ்டார்? அதிர்ச்சியில் ரசிகர்கள்