- Home
- Cinema
- 4 மாதத்தில் குழந்தை... இதே மாதிரி அஜித் படத்தையும் பாஸ்ட்டா ரிலீஸ் பண்ணிடுங்க விக்கி - அஜித் ரசிகர் கோரிக்கை
4 மாதத்தில் குழந்தை... இதே மாதிரி அஜித் படத்தையும் பாஸ்ட்டா ரிலீஸ் பண்ணிடுங்க விக்கி - அஜித் ரசிகர் கோரிக்கை
திருமணமாகி நான்கே மாதத்தில் பாஸ்ட்டாக குழந்தைக்கு தந்தை ஆன விக்னேஷ் சிவனிடம் அஜித் ரசிகர் ஒருவர் வைத்துள்ள கோரிக்கை இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் என தொடர்ந்து கமர்ஷியல் படங்களாக இயக்கி மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனவர் விக்னேஷ் சிவன். இவர் நடிகை நயன்தாராவை காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது இந்த ஜோடி.
இருவரும் திருமணம் முடிந்த கையோடு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்ததோடு மட்டுமின்றி கோவில் வளாகத்தில் போட்டோஷூட்டும் நடத்தினர். அப்போது நடிகை நயன்தாரா காலில் செருப்பு அணிந்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உடனடியாக இதற்கு மன்னிப்பு கேட்டி விக்னேஷ் சிவன் அறிக்கை வெளியிட்டார்.
இதையும் படியுங்கள்... வாடகை தாய் மூலம் குழந்தை... நயன்தாராவிடம் விசாரிக்கப்படுமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
இதையடுத்து தற்போது குழந்தைகள் பெற்றுக்கொண்டதன் மூலம் சர்ச்சையில் சிக்கி உள்ளனர். திருமணமான நான்கு மாதத்திலேயே தங்களுக்கு குழந்தை பிறந்துவிட்டதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். அவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. தற்போது சமூக வலைதளங்களில் இதுதான் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
இந்நிலையில், திருமணமாகி நான்கே மாதத்தில் பாஸ்ட்டாக குழந்தைக்கு தந்தை ஆன விக்னேஷ் சிவனிடம் அஜித் ரசிகர் ஒருவர் வைத்துள்ள கோரிக்கை இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. அதன்படி அவர் கூறியுள்ளதாவது : “இதே மாதிரி பாஸ்ட்டா ஏகே 62 படத்தையும் ரிலீஸ் பண்ணிடுங்க அண்ணா” என பதிவிட்டுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... 4 மாதத்தில் பெற்றோர்களான நயன்-விக்கி..திருமணம் முதல் இன்று வரை அழகிய தருணங்கள்