அஜித்துக்கு ஓகே... ஆனா விஜய்க்கு நோ - ஜோடி சேர மறுத்த ஐஸ்வர்யா ராய்க்கு தளபதி கொடுத்த தரமான பதிலடி
உலக அழகி பட்டம் பெற்ற பின் நடிகை ஐஸ்வர்யா ராய் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்க மறுத்த சம்பவம் அரங்கேறிய நிலையில், அதன் பின்னணியை தற்போது பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஐஸ்வர்யா ராய். கடந்த 1994-ம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்ற இவர், 1997-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து ஷங்கரின் ஜீன்ஸ், ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மணிரத்னம் இயக்கிய குரு என தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
திருமணத்துக்கு பின் தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ஐஸ்வர்யா ராய், அவ்வப்போது மட்டும் தலைகாட்டி வருகிறார். அந்த வகையில் மணிரத்னம் இயக்கிய இராவணன் படத்தில் நடித்த அவர், இதையடுத்து 12 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் தான் பொன்னியின் செல்வனில் நடித்தார். தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அப்படத்தின் புரமோஷனில் பிசியாக உள்ளார் ஐஸ்வர்யா ராய். அப்படத்தில அவர் நந்தினி என்கிற பவர்புல்லான கேரக்டரில் நடித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமாவில் கோலோச்சிய சமயத்தில் அவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க மறுத்த சம்பவமும் நடந்துள்ளது. விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு ரிலீசான திரைப்படம் தமிழன். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்திருப்பார். ஆனால் முதலில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க படக்குழு ஐஸ்வர்யா ராய்யை தான் அணுகியதாம். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டாராம்.
இதையும் படியுங்கள்... உதயநிதி ஸ்டாலின் உடன் நேருக்கு நேர் மோதும் சிவகார்த்திகேயன்... பரபரப்பாகும் கோலிவுட்
அதற்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட். அது என்னவென்றால், விஜய் என்னைவிட வயதில் சிறியவராக தெரிவார். அதனால் அவருக்கு நான் ஜோடியாக நடித்தால் செட் ஆகாது. அஜித் ஹீரோவா நடிச்சா நான் ஜோடியாக நடிக்க ரெடி என சொல்லி இருக்கிறார். ஐஸ்வர்யா ராயிடம் இருந்து இந்த பதிலைக் கேட்டதும் தமிழன் படத்தின் தயாரிப்பாளர் சட்டென அங்கிருந்து கிளம்பிவிட்டாராம்.
ஐஸ்வர்யா ராய் ஜோடி சேர மறுத்ததும் உலக அழகி பட்டம் பெற்ற வேறு நடிகைகளை நடிக்க வைக்க திட்டமிட்டதாம் படக்குழு. விஜய்யும் அதில் உறுதியாக இருந்ததை அடுத்து 2000-ம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்ற பிரியங்கா சோப்ராவை தமிழன் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்து பதிலடி கொடுத்தாராம் விஜய். தற்போது பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் வரை சென்று கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... யாத்திசை முதல் குலசாமி வரை... ஏப்ரல் 21-ந் தேதி தியேட்டரில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீசா? - முழு லிஸ்ட் இதோ