உதயநிதி ஸ்டாலின் உடன் நேருக்கு நேர் மோதும் சிவகார்த்திகேயன்... பரபரப்பாகும் கோலிவுட்
உதயநிதி நடித்துள்ள மாமன்னன் திரைப்படமும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படமும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது மாவீரன் திரைப்படம் தயாராகி வருகிறது. யோகிபாபு நடித்த மண்டேலா படத்தை இயக்கி அதற்காக 2 தேசிய விருதுகளையும் வென்ற இயக்குனர் மடோன் அஸ்வின் தான் மாவீரன் படத்தையும் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மிஷ்கின் நடிக்கிறார். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது மாவீரன் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி மாவீரன் படத்தை வருகிற ஜூன் மாதம் 29-ந் தேதி பக்ரீத் விடுமுறையில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பைத்தியக்காரத்தனமான செயல்களை செய்கிறார்... அவ்வளவுதான் சமந்தாவின் கெரியர் முடிஞ்சது - பிரபல தயாரிப்பாளர் சாடல்
இந்நிலையில், அப்படத்துக்கு போட்டியாக உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் திரைப்படமும் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அவர் கடைசியாக நடித்த திரைப்படம் தான் மாமன்னன். அப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் ஆவார்.
மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். சிவகார்த்திகேயனின் மாவீரன் படமும், உதயநிதியின் மாமன்னன் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ள தகவல் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்... யாத்திசை முதல் குலசாமி வரை... ஏப்ரல் 21-ந் தேதி தியேட்டரில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீசா? - முழு லிஸ்ட் இதோ