மிஸ் யூஸ் செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராய் புகைப்படம், வீடியோ - கோர்ட்டுக்கு சென்ற நடிகை!
தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுமதியின்றி யாரும் பயன்படுத்தக் கூடாது என்று பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
15

Image Credit : Aishwarya Rai Bachan Instagram
ஐஸ்வர்யா ராய் மார்பிங், AI புகைப்படங்கள், வீடியோக்கள்
பிரபல பாலிவுட் நடிகை, உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் அவரது அழகு சிறிதும் குறையவில்லை. இதனால் இளைஞர்கள் இன்றும் ஐஸ்வர்யா ராயை மிகவும் விரும்புகிறார்கள். ஆனால் அவர் மீது இளைஞர்கள் காட்டும் அன்பை சிலர் பணமாக்க நினைக்கிறார்கள்.
25
Image Credit : Aishwarya Rai Bachchan Instagram
தனது புகைப்படங்கள், வீடியோக்கள் மீது நீதிமன்றத்தை அணுகிய ஐஸ்வர்யா ராய்
தனக்குச் சம்பந்தமில்லாத ஆபாச மார்பிங் வீடியோ, AI புகைப்படங்களால் சோர்வடைந்த ஐஸ்வர்யா ராய் நேரடியாக நீதிமன்றத்தை அணுகினார். தனது புகைப்படங்கள், வீடியோக்களைப் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
35
Image Credit : Aishwarya Rai Bachchan Instagram
ஐஸ்வர்யா ராய் பெயரில் ஆபாச மார்பிங் வீடியோக்கள்
ஐஸ்வர்யா ராயின் மார்பிங் புகைப்படங்கள், வீடியோக்கள் விவகாரம் குறித்து வழக்கறிஞர் சந்தீப் சேதி நீதிமன்றத்தில் வாதிட்டார். அவரது படங்களை மட்டுமல்ல, அவரைப் போன்ற தோற்றமுடையவர்களின் படங்களையும் பயன்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.
45
Image Credit : Aishwarya Rai Bachchan Instagram
தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கப்படுவதாக ஐஸ்வர்யா ராய் குற்றச்சாட்டு
தனது நற்பெயருக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் களங்கம் விளைவிக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை ஐஸ்வர்யா ராய் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டார்.
55
Image Credit : Getty
டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகிய ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய் சார்பில் வழக்கறிஞர்கள் பிரவீன் ஆனந்த், துருவ் ஆனந்த் ஆகியோர் வாதாடினர். டெல்லி உயர் நீதிமன்றம் அடுத்த விசாரணையை 2024 ஜனவரி 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Latest Videos