சர்வைவர் ஐஸ்வர்யா கிருஷ்ணனின் காதலர் இவரா..? பிறந்தநாளில் ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி..!
சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான ஐஸ்வர்யா கிருஷ்ணன் முதல் முறையாக தன்னுடைய காதலரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நிகராக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, கேம் ஷோ தான் 'சர்வைவர்'. பிக்பாஸ் வீட்டில் உள்ளதை போன்று, ஒரு வீட்டில் போட்டியாளர்களை அடைத்து வைக்காமல், காடு, மலை, மணல், தண்ணீர், இயக்கியோடு இணைந்து பிரபலங்கள் போராடும் விதமாக இந்த விளையாட்டு வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில், கடைசி வரை தாக்கு பிடித்து... டைட்டில் வின்னர் ஆக நடிகை விஜயலட்சுமி தேர்வு செய்யப்பட்டார். இதில் கடைசி வரை போராடி தோற்றவர் தான் ஐஸ்வர்யா கிருஷ்ணன். எனினும் இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்களும் உருவாகினர்.
மேலும் செய்திகள்: உதவி செய்ய ஆளில்லாமல் நடுரோட்டில் தவித்த நபர்.! மீண்டும் மெக்கானிக்காக மாறிய அஜித்.! ரசிகரின் நெகிழ்ச்சி பதிவு
பிட்னஸ் டிரெய்னரான இவர் பல முன்னணி திரையுலக பிரபலங்களுக்கு பிட்னஸ் டிரெய்னராக இருப்பது மட்டும் இன்றி, மாடலிங் துறையிலும் கலக்கி வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய காதலரின் பிறந்தநாளில், முதல் முறையாக காதலருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வரித்துள்ளார். இருவரும் மிகவும் நெருக்கமாக அமர்ந்தபடி எடுத்து கொண்ட புகைப்படங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: அதற்குள் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் டாப் சீரியல்..! ரசிகர்களை அப்செட் ஆக்கிய தகவல்..!
காதலரை அறிமுகம் செய்து வைத்த கையேடு விரைவில்... ஐஸ்வர்யா கிருஷ்ணன் தன்னுடைய திருமணம் குறித்த தகவலையும் வெளியிட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.