சிம்புவின் 50வது படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள எஸ்.டி.ஆர் 50 திரைப்படத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாம்.

தக் லைஃப் சிம்பு
நடிகர் சிம்பு சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். அவர் இதுவரை 47 படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அவரின் 48வது படமாக தக் லைஃப் உருவாகி வருகிறது. இப்படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். இதில் கமல்ஹாசன், திரிஷா, அபிராமி, நாசர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசனின் மகனாக சிம்பு நடித்திருக்கிறார்.
சிம்புவின் 49வது படம்
சிம்புவின் 49-வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் இயக்க உள்ளார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் சிம்பு கல்லூரி மாணவனாக நடிக்க உள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகர் சந்தானம் காமெடியனாக ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளார். இதன் ஷூட்டிங் வருகிற மார்ச் மாதம் தொடங்க உள்ளதாம். இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்... நயன்தாரா உடன் சிம்பு செய்த சேட்டைகள்; போனில் பார்த்து பதறிப்போன தயாரிப்பாளர்!
சிம்புவின் 50வது படம்
இதையடுத்து சிம்புவின் 50வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். இப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிக்க இருந்த நிலையில் தற்போது அவரிடம் இருந்து வாங்கி நடிகர் சிம்புவே தயாரிக்க முடிவெடுத்துள்ளார். இதற்காக ஆத்மன் சினி ஆர்ட்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி உள்ளார் சிம்பு. வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் சிம்பு ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
சிம்பு உடன் கைகோர்க்கும் ஏஜிஎஸ்
எஸ்.டி.ஆர்.50 திரைப்படத்தை சிம்புவின் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மட்டுமே தயாரிக்க இருந்த நிலையில், தற்போது அதில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது பெரிய பட்ஜெட் படம் என்பதால் சிம்புவுடன் சேர்ந்து ஏஜிஎஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்க உள்ளதாம். இப்படத்தை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள எஸ்.டி.ஆர்.51 திரைப்படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு காட் ஆஃப் லவ் என பெயரிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... காதல் சுகுமார் சொன்ன வார்த்தை; சிம்புவுக்கு இந்த ஹிட் பாட்டை எழுதிய டி.ராஜேந்தர்!