அட்லீக்கு பாலிவுட்டில் செம்ம டிமாண்ட்... ஷாருக்கானை தொடர்ந்து மற்றுமொரு இந்தி நடிகருடன் கூட்டணி
ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் அட்லீ, அடுத்ததாக மற்றொரு இந்தி நடிகருடன் கூட்டணி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து 4 பிளாகபஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லீ. இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ, அங்கு முதல் படத்திலேயே ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் ஜவான் என்கிற மாஸ் திரைப்படம் தயாராகி உள்ளது. ஜவான் படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தை வருகிற செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய உள்ளனர்.
ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும் நடிக்கிறார். இதுதவிர சானியா ஐயப்பன், பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அட்லீயும், அனிருத்தும் இணைந்து பணியாற்றும் முதல் படம் இதுவாகும்.
இதையும் படியுங்கள்... ரசிகர்களுக்கு டபுள் டிரீட் கொடுக்க தயாராகும் சிவகார்த்திகேயன்..! அயலான் டீசர் ரெடி... எப்போ ரிலீஸ் தெரியுமா?
ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் பேமஸ் ஆன இயக்குனராக உருவெடுத்துள்ள அட்லீக்கு தற்போது அங்கு மிகவும் டிமாண்ட் நிலவி வருவதாக கூறப்படுகிறது. ஜவான் படத்தை முடித்ததும் விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்குவதாக இருந்த அட்லீ, தற்போது பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிவதால், விஜய் படத்தை கிடப்பில் போட்டுவிட்டு, இந்தியில் அடுத்தடுத்து படங்களை இயக்க முடிவு செய்துள்ளாராம்.
அதன்படி ஜவான் படத்துக்கு பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் வருண் தவான் உடன் அட்லீ கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாக உள்ளதாம். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு படத்தை திரைக்கு கொண்டு வரும் ஐடியாவில் படக்குழு உள்ளதாம்.
இதையும் படியுங்கள்... 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை அதிர்ச்சி மரணம்! சோகத்தில் மூழ்கிய சின்னத்திரை பிரபலங்கள்!