சரவண பவன் அண்ணாச்சிக்கு அடுத்து சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்.. இதெல்லாம் தேவையா கோபி
சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கோவிலில் திருமணம் செய்து கொண்ட பிறகு, தன்னை கர்ப்பமாக்கியும் ஏமாற்றிவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் சர்ச்சை
நடிகர் மற்றும் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீதான குற்றச்சாட்டு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “மெஹந்தி சர்கஸ்” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், சமையல் நிகழ்ச்சிகள் மூலமும் மேலும் பிரபலமானார் ரங்கராஜ். தற்போது “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே திருமணம் ஆன இவர், தனது மனைவி ஸ்ருதியுடன் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
குக் வித் கோமாளி நடுவர்
இதற்கிடையில், ஆடை வடிவமைப்பாளரும் பிரபலங்களின் ஸ்டைலிஸ்டுமான ஜாய் கிரிசில்டாவுடன் ரங்கராஜ் நெருக்கம் கொண்டதாக செய்திகள் வெளிவந்தன. ஜாய் கிரிசில்டா மற்றும் ரங்கராஜ் இணைந்து எடுத்த புகைப்படங்கள், அவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலானது. மேலும், தாம் 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக ஜாய் கிரிசில்டா அப்போது அறிவித்ததும் சர்ச்சையை கிளப்பியது.
ஜாய் கிரிசில்டா புகார்
ஆனால், ரங்கராஜ் தனது முதல் மனைவியுடன் விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டாரா என்ற கேள்வி எழுந்தது. அதேசமயம், சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராமிலிருந்து ஜாய் கிரிசில்டாவுடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியது சந்தேகத்தை அதிகரித்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பெருகின.
மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது மனைவி
தற்போது, ஜெய் கிரிசில்டா சென்னையில் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். கோவிலில் திருமணம் செய்து கொண்ட பிறகு, தன்னை கர்ப்பமாக்கியும் ஏமாற்றிவிட்டதாக அவர் ரங்கராஜ் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த புகாரால், நடிகர்-சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீதான சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது.
சரவணபவன் அண்ணாச்சி
சமையல் துறையில் உள்ளவர்களில் தற்போது மிகவும் பிரபலமான, காஸ்ட்லியான மாதம்பட்டி ரங்கராஜ் இப்போது ட்ரெண்டிங் ஆனாலும், சோசியல் மீடியா இல்லாத அக்காலத்தில் பிரபலமாக இருந்த சரவணபவன் அண்ணாச்சி பெண் தொடர்புடைய விஷயங்களில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.