MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Samantha Divorce Reason: சமந்தாவை விவாகரத்து செய்ய காரணம் இதுவா? குத்தி காட்டுவது போல் பேசிய நாகசைதன்யா!

Samantha Divorce Reason: சமந்தாவை விவாகரத்து செய்ய காரணம் இதுவா? குத்தி காட்டுவது போல் பேசிய நாகசைதன்யா!

நடிகரும், பிரபல நடிகை சமந்தாவின் (Samantha) முன்னாள் கணவருமான நாக சைதன்யா (Naga chaitanya), சமீபத்திய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. ஏனெனில் இதில் தன்னுடைய மனைவி சமந்தாவை குத்தி காட்டி பேசுவது போல், மறைமுகமாக தங்களின் விவாகரத்து குறித்த காரணத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 16 2021, 08:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவும், அவரது காதல் மனைவியும் நடிகையுமான  சமந்தா ரூத் பிரபுவும் கடந்த அக்டோபர் 02 தேதி,  இருவரும் ஒருமனதாக பிரிந்ததாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

 

29

சமந்தா - நாக சைதன்யா பிரிவுக்கு காரணம் என பல யுகங்கள் கிளப்பியது. குறிப்பாக சமந்தா தனது ஒப்பனையாளர் ப்ரீத்தம் என்பவருடன் நெருங்கி பழகி வருவதுதான் காரணம் என்றும், நடிப்பின் மீது மட்டுமே ஆர்வம் காட்டி வருவதால் அவர் ஒருபோதும் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும், கருக்கலைப்புகள் செய்ததாகவும் கூறப்பட்டது.

 

39

இதுபோன்ற தவறான யுகங்களுக்கு சமந்தா தன்னுடைய அறிக்கை மூலம் பதில் அளித்தது மட்டும் இன்றி, தன்னை பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
 

49

இந்நிலையில் இதுவரை தன்னுடைய விவாகரத்து குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனம் காத்து வந்த நாக சைதன்யாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

 

59

அதில் அவர் தனது கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். “நான் எல்லா வகையான பாத்திரங்களையும் தேர்வு செய்யும் போது அது ஒரு போதும், எனது குடும்பத்தையும், எங்கள் கௌரவத்தையும் பாதிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். எனது குடும்ப உறுப்பினர்களை சங்கடப்படுத்தும் வேடங்களில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

 

69

இவர் கூறி இருக்கும் பதிலை வைத்து, சமந்தா திருமணத்திற்கு பிறகு... தொடர்ந்து சர்ச்சையான வேடங்களை தேர்வு செய்து நடித்தது தான் விவாகரத்துக்கு காரணமா? என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 


 

79

மேலும் இந்த பேட்டியின் மூலம் மறைமுகமாக சமந்தாவை சைதன்யா சாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. திருமண முறிவுக்கு பின்னர்,  சமந்தா புஷ்பா படத்தில் இடம்பெறும்  ஐட்டம் பாடலான 'ஓ சொல்றியா மாமா' வேற லெவலுக்கு ரீச் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

89

சமீபத்தில் சமந்தா ஃபிலிம்ஃபேருக்கு அளித்த பேட்டியில், தனது விவாகரத்து பற்றி கூறினார். அதில் “உங்களுக்கு ஒரு மோசமான நாள் இருந்தால் பரவாயில்லை, குரல் கொடுங்கள், புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் எதையாவது கடந்து செல்கிறீர்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டவுடன், பாதி வேலை முடிந்தது… நான் இன்னும் என் வாழ்க்கையை வாழப் போகிறேன் என்று எனக்குத் தெரியும், மேலும் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நான் இப்போது எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களிலும், நான் எவ்வளவு வலிமையானவன் என்று ஆச்சரியப்பட்டேன்.

 

99

நான் மிகவும் பலவீனமானவள் என்று நினைத்தேன். இந்த விவாகரத்து முடிவால் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். ஆனால் நான் இவ்வளவு வலிமையானவனாக இருப்பேன் என நினைக்கவில்லை.  இன்று நான் எவ்வளவு வலிமையாக இருக்கிறேன் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என தெரிவித்திருந்தார்". என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved